2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை! கணவர் கைது!

Photo of author

By Parthipan K

குடும்ப தகராறில் 2 குழந்தைகளுக்கு கொடுத்து கொன்றுவிட்டு தாயும் தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை அடுத்த கண்ணிசேர்வைபட்டி கிராமத்தில் வசித்து வருபவர் பிரபு. இவருக்கும் பவித்ரா என்ற பெண்ணுக்கும் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து தரணிஷ் லக்ஷ்மன் ஆகிய 2 மகன்கள் இருந்தன.

பிரபு அவ்வப்போது விவசாயியாகவும், அவ்வபோது லாரி ஓட்டுநராகவும் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு அதிக அளவில் மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மீண்டும் கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த முறை பிரச்சனை முற்றவே விரக்தியடைந்த மனைவி நேற்று மனதை கல்லாக்கிக் கொண்டு கடைக்குச் சென்று குளிர்பானம் வாங்கி வந்து அதில் விஷம் கலந்து தனது இரண்டு குழந்தைகளுக்கு முதலில் கொடுத்து கொன்றுள்ளார்.

பிறகு அவரும் அந்த விஷத்தை குடித்துள்ளார். பின்  அக்கம்பக்கத்தினர் சிலர் உள்ளே சென்று பார்த்த போது மூன்று பேரும் மயங்கிய நிலையில் கிடந்த உள்ளனர் இதைக்கண்டு கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் போலீஸில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் போலீஸ், 2 குழந்தைகள் ஏற்கனவே இறந்து விட்டதை உணர்ந்தனர்.

உயிருக்கு போராடி கொண்டிருந்த பவித்ராவை மீட்டுத் தேனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கூட்டிச்சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பவித்ராவின் உறவினர்களும் காவல் நிலையத்தில் கணவர் பிரபு மீது புகார் அளிக்க அதன்படி அவரையும் கைது செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.