ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்து தாய் தற்கொலை!  பாம்பு கடித்து மகள் பலி! ஊரக வேலை உறுதி திட்ட பொறுப்பாளர் குடும்பத்தில் அரங்கேறிய சோக நிகழ்வு! 

0
174
#image_title

ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்து தாய் தற்கொலை!  பாம்பு கடித்து மகள் பலி! ஊரக வேலை உறுதி திட்ட பொறுப்பாளர் குடும்பத்தில் அரங்கேறிய சோக நிகழ்வு! 

ஊரக வேலை உறுதி திட்ட பொறுப்பாளர் பஸ்ஸிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சுவடு ஆறுவதற்குள் அவரது மகளை பாம்பு கடித்ததில் பலியானார். நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள கள்ளிக்குடி அருகில் உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் கோவை மாவட்டத்தில் பஞ்சாலையில் தங்கி கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.  இவரது மனைவி நாகலட்சுமி வயது31. இவர்களுக்கு சங்கீதா (12), விஜயதர்ஷினி (10), தேன்மொழி (9), சண்முகப்பிரியா (5), பாண்டி சிவானி (4) என்ற 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கணேசன் விடுமுறை நாட்களில் அவ்வப்போது ஊருக்கு வந்து மனைவி மற்றும் மகள்களை பார்த்து செல்வது வழக்கம். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள நாகலட்சுமி தனக்கு ஐந்து பெண் குழந்தைகள் இருப்பதை சுட்டிக்காட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு வழங்குமாறு மனு அளித்தார்.

இதன் அடிப்படையில் நாகலட்சுமிக்கு 100 நாள் வேலை திட்ட பொறுப்பாளர் பணி வழங்கப்பட்டது. கடந்த 11/2 ஆண்டுகளாக அந்தப் பணியில் நாகலட்சுமி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது 2 மகள்களுடன் மையிட்டான்பட்டியில் இருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு அரசு பேருந்தில் பயணம் செய்த நாகலட்சுமி திடீரென ஓடும் பஸ்ஸில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் நாகலட்சுமி குழந்தைகள் மதுரையில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் அவரது 2 குழந்தைகளை பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்த குழந்தைகளில் 4 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது.

ஒரு குழந்தை இறந்த நிலையில் மற்றொரு 9 வயதான குழந்தை விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த மரணங்கள் அந்த பகுதியை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.