மாமியாரை தீர்த்து கட்டிய மருமகள்! அதிர்ச்சியூட்டும் சம்பவத்திற்கான காரணம்

Photo of author

By CineDesk

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாமியாரை மருமகளே மண்ணெண்ணையை ஊற்றி எரித்து கொன்றது காவல் துறை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வல்லத்திராகோட்டை அருகே மணியம்பள்ளம் என்ற பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு பிரதீபா என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் நடந்துள்ளது. தற்போது இவர்களுக்கு 9 மாத குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் பிரதீபாவிற்கும் அவரது மாமியார் ராஜம்பாளிற்கும் இடையே கருத்து வேறுபட்டால் அடிக்கடி சண்டை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் ராஜம்பாள் 100 நாள் வேலைக்கு சென்று விட்டு வீட்டில் வந்து உறங்கிக் கொண்டிருந்திருக்கிறார். இவ்வாறு உறங்கி கொண்டிருந்த மாமியார் ராஜம்பாள் மீது ஐந்து லிட்டர் மண்ணெண்ணெயை ஊற்றிய அவரது மருமகள் பிரதீபா தீ வைத்து எரித்துள்ளார்.

இதில் 90 சதவீதம் தீக்காயமடைந்த ராஜம்பாள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சிகிச்சை பலனின்றி ராஜாம்பாள் இன்று உயிரிழந்தார். இதனையடுத்து அவருக்கு தீ வைத்து கொலை செய்ததற்காக அவர் மருமகள் பிரதீபாவை வல்லத்திராகோட்டை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Mother in Law Murdered by her Daughter in Law-News4 Tamil Online Tamil News

கைது செய்யப்பட்ட பிரதீபாவிடம் காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வரதட்சணைக் கேட்டு மாமியார் ராஜாம்பாள் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், மேலும் அவர் தனது கணவருடன் சேர்ந்து வாழ விடாமல் தனக்கு இடையூறு செய்ததாகவும் கூறியுள்ளார்.

அதனால் பிரச்சனைக்கு காரணமான தனது மாமியாரை கொலை செய்ய திட்டமிட்ட அவர் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய மாமியாருக்கு காபியில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்துள்ளார். அவர் கொடுத்த காபியை குடித்து மயங்கிய மாமியாரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்ததாகவும் பிரதீபா கூறியுள்ளதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

இவ்வாறு வரதட்சணை கேட்டு கொடுமை செய்த காரணத்திற்காக மாமியாரை மருமகளே தீர்த்துக்கட்டிய செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.