தாயின் கொடூரச் செயல்! ஆம்பூரில் பயங்கரம்!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்டூர் அருகேயுள்ள பெரியாங்குப்பம் ரசாக்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி.இவரது கணவர் புகழேந்தி.இவர்களுக்கு ம்மொன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்.இவர்கள் இருவருக்கும் நடந்த கருத்து வேறுபாடு காரணமாக புகழேந்தி தன் சொந்த ஊரான வேலூருக்குச் சென்று அங்கேயே இருந்துவிட்டார்.கிட்டத்தட்ட 30 வருடங்களாக இவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
மூன்று மகன்களையும் இவரே தனி ஆளாய் இருந்து வளர்த்து வந்தார்.இந்நிலையில் இவரது இரண்டாவது மகனான சிவக்குமார் கட்டிடத் தொழிலாளியாக உள்ளார்.இவருக்கு வயது 35.இவருக்குத் திருமணமாகி கெளரி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.ஒரு ஆண் குழந்தை மற்றும் இரண்டு பெண் குழந்தைகள்.சிவக்குமார் தன் குடும்பத்தை சரிவர கவனிக்காமல் இருந்ததால் குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டது.மேலும் பல குற்றச் செயல்களிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆம்பூர் காவல் நிலையத்தில் இவர் மீது குற்ற வழக்குகள் ஏராளமாக இருந்தன.இதனால் அவரது மனைவியுடன் அடிக்கடி சண்டை நடக்கும்.ஒரு நாள் அவரது மனைவி சிவக்குமாருடன் சண்டை போட்டுக் கொண்டு தன் தாய் வீடான நாச்சாற்குப்பத்திற்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார்.இது நடந்து மூன்று ஆண்டுகள் ஆகிறது.பின்னர் சிவக்குமாரின் தாய் இரண்டு வாரங்களுக்கு முன் சிவக்குமாரின் மனைவியை சமாதானம் செய்து மீண்டும் தன் வீட்டிற்க்கு கூட்டிவந்துள்ளார்.
நேற்று இரவு வீட்டின் திண்ணையில் சிவக்குமார் தூங்கிக்கொண்டிருந்தார்.அப்போது யாரோ அவரின் மேல் கல்லை போட்டுக் கொன்றுள்ளனர்.காலையில் பார்த்த பின்னர் தான் இந்த சம்பவம் அனைவருக்கும் தெரிந்துள்ளது.இந்த சம்பவத்தை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சிவக்குமாரின் அம்மாதான் தன் மகனை தலையில் கல்லை போட்டுக் கொன்றுள்ளது தெரிய வந்தது.சிவக்குமாரின் தாய் தன் மகன் மீண்டும் தன்னையும் தன் மனைவியையும் வம்புக்கு இழுத்து அடிக்க வந்ததாக அவர் தெரிவித்தார்.அந்த ஆத்திரத்தில் இந்த சம்பவத்தை செய்ததாக அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.