சின்னதிருப்பதி அருகே14 பிள்ளைகளுக்கு தாய்! கிணற்றில் விழுந்து உயிரிழப்பு!.. வெளிவரும் பகிர் தகவல்..!
சேலம் சின்ன திருப்பதி பெருமாள் கோவிலில் அருகேவுள்ள விவசாயி கிணற்றில் ஒரு சடலம் மிதந்துள்ளதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலை அறிந்து வந்த கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சடலம் இருந்த பகுதியை பார்வையிட்டனர். தீயணைப்பு வீரர்களையும் சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர்.
பின்னர் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண் யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.காவல்துரையின் விசாரணையில் ஜான்சன்பேட்டையை சேர்ந்த வேலாயுதம் என்பவருடைய மனைவி சிரங்கம்மாள் என்பது தெரிய வந்தது.
இவருடைய வயது 80. மேலும் இந்த சடலத்தை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை மூலம் சிரங்கம்மாள் மற்றும் வேலாயுதம் தம்பதிக்கு நாலு மகன்களும் மற்றும் பத்து மகள்களும் உள்ளார்கள் என்பது தெரியவந்தது. சேலம் மத்திய ஜெயிலில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் 1984 நாலாம் ஆண்டு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார்.
அதன் பிறகு அவருக்கான ஓய்வூதிய தொகை 11 ஆயிரத்தை அவருடைய மனைவி சிரங்கம்மாள் பெற்று வந்தார்.இந்நிலையில் நாலு மகன்களில் ஒருவரான கார்த்திகேயன் என்ற பெயரனுடன் வசித்து வந்தார். பேரனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சிரங்கம்மாள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். கடந்த ஓரிரு நாட்களாக அவர் அந்தப் பகுதியிலேயே சுற்றி திரிந்து வந்துள்ளார்.
மனவிரத்தியின் காரணமாக அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். முழு விசாரணையின் மூலம் போலீசார் இதை தெரிவித்தனர். பேரனுடன் தகராறு ஏற்பட காரணம் என்ன? அல்லது பேரன் கொடுமைப்படுத்தி உள்ளாரா? என்பது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 14 பிள்ளைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.