வேலைக்கு செல்லாத மகனை கண்டித்த தாய்! விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு ! 

Photo of author

By Amutha

வேலைக்கு செல்லாத மகனை கண்டித்த தாய்! விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு ! 

வேலைக்கு செல்லாமல் வீட்டில் ஊதாரித்தனமாக சுற்றிய மகனை தாய் கண்டித்ததால் மகன் விபரீத முடிவு எடுத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள புது இருளன்செரியை சேர்ந்தவர் ஜெயராமன். இவருக்கு மனைவியும் மோகன் வயது 23. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயராமன் இறந்து விட்டார். இதனால் குடும்பத்தில் வறுமை வாட்டியது.

மோகனுக்கு படிப்பு சுமாராக மட்டுமே ஏறியதால் 10 வகுப்பு வரை மட்டுமே  படித்துள்ளார். இதனால் கிடைத்த கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இதையடுத்து கடந்த சில மாதங்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் ஊதாரித்தனமாக மோகன் சுற்றி வந்துள்ளார்.

இதனால் வருத்தமடைந்த அவரது தாய் சித்ரா இப்படி எந்த வேலைக்கும் செல்லாமல் வெட்டியாக ஊரைச் சுற்றிக் கொண்டுள்ளாய்! அதற்கு பதிலாக ஏதேனும் கிடைத்த வேலைக்கு செல்லலாம் அல்லவா? என கண்டித்துள்ளார்.

தாய் தன்னை கண்டித்ததால் மிகவும் மனவேதனை அடைந்த மோகன் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் அங்குள்ள கூவம் பகுதியில் உள்ள மாந்தோப்பில் உள்ள மாமரத்தில்சே தனது அம்மாவின் சேலையால்  தூக்கிட்டு தற்கொலை  செய்து கொண்டுள்ளார். இது குறித்து அவரது தாய் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்த மோகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வேலைக்கு செல்லாதாதை தாய் கண்டித்ததால் மகன் தற்கொலை செய்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.