கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு குழந்தைகளுடன் தாய் மாயம்! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!

Photo of author

By Parthipan K

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு குழந்தைகளுடன் தாய் மாயம்! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கோட்டை அருகே இனையம் பகுதி தோப்பு விலையை சேர்ந்தவர் வினித் குமார் (37). இவர் ஒரு தொழிலாளி. இவரின் மனைவி சாந்தி (32). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மேலும் சாந்தி தனது மகள்களுடன் தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி வீட்டிலிருந்து சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பாத காரணத்தால் அவரது கணவர்  வினித்  குமார் மனைவி மற்றும் மகள்களை பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளார்.

ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதனால் மேலும் சாந்தியின் செல்போனை தொடர்பு கொண்டு பார்த்தனர். அப்போது சாந்தியின் செல்போனானது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பாக வினித் குமார் புதுக்கடை போலீசாரிடம் புகார் அளித்தார் அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சேசு ராஜசேகர் சுகுமாரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும்  அப்போது மகளுடன் சாந்தி மாயமாகி எங்கே சென்றுள்ளார் அவர்களை யாராவது கடத்தி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திவுள்ளது.