தஞ்சையில் கையும் களவுமாக மாட்டிய மோட்டார் சைக்கிள் திருடன்!!

0
182
Motorcycle thief caught red-handed in Tanjore!!
Motorcycle thief caught red-handed in Tanjore!!

தஞ்சையில் கையும் களவுமாக மாட்டிய மோட்டார் சைக்கிள் திருடன்!!

தஞ்சையை அடுத்த ராவுத்தா பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய வயது 42. இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் உணவு உண்பதற்காக மோட்டார் சைக்கிளை வெளியில் நிறுத்திவிட்டு உள்ளே  சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து  வெளியே வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணவில்லை.

அதிர்ச்சியடைந்த  ரமேஷ் அக்கம் பக்கம் தேடி உள்ளார். எங்கு தேடியும் அவரது மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை. அப்பொழுது தான் தெரிந்தது திருடர்கள் யாரோ மோட்டார் சைக்கிளை திருடி சென்றிருப்பது. இது குறித்து ரமேஷ் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்  பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே ரமேஷ் டீக்கடை அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய மோட்டார் சைக்கிள் ஒருவர் ஓட்டி வந்ததை கவனித்தார். உடனே அவரை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தஞ்சை அழகி குளம் பகுதியைச் சேர்ந்த சபி அகமது என்பது தெரியவந்தது. இதுகுறித்து சபி அகமதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு சூழல் நிலவி வருகிறது.

Previous articleஜீன்ஸ் போட தடை விதித்த கணவரை கத்தியால் குத்திய பெண்… வாக்குவாதத்தில் பலியான உயிர்!
Next articleவீடு இல்லாத மக்கள் விண்ணப்பிக்கலாம்! இதோ இந்த ஆவணங்கள் இருந்தால் போதுமாம்!