வாகன ஓட்டிகள் இனி எங்கும் தப்ப முடியாது!! தமிழக அரசின் புதிய தொழில்நுட்பம்!!

0
262
Motorists have nowhere to escape!! New Technology of Tamil Nadu Government!!
Motorists have nowhere to escape!! New Technology of Tamil Nadu Government!!

வாகன ஓட்டிகள் இனி எங்கும் தப்ப முடியாது!! தமிழக அரசின் புதிய தொழில்நுட்பம்!!

தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும், அரசு கண்காணிப்பு கேமரா பொருத்தி உள்ளது. விபத்துகளோ, வேறு அசம்பாவிதங்களோ நடை பெறாமல் இருக்க ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளது. ஆனால் இப்போது போக்குவரத்தை கண்காணித்து, விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு புதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.

அதாவது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சாலைகளிலும் நவீன கேமராக்கள் பொருத்தப் படும். எலக்ட்ரானிக் என்போர்ஸ்மென்ட்  டிவைஸ் (Electronic Enforcement Device) மூலம் போக்குவரத்தை கண்காணித்து, விபத்துகளை தவிர்க்கவும், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் போக்குவரத்து காவலர்கள் தங்களது உடைமைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி போக்குவரத்தை கண்காணிக்க வேண்டும். மற்றும் போக்குவரத்து வாகனங்களின், டாஷ்போர்டிலும் கேமராக்களை பொருத்தி போக்குவரத்தை கண்காணிக்கலாம்.

மேலும் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள்,  முக்கிய நகரங்கள், முக்கிய சந்திப்புகள் போன்ற இடங்களில் நவீன கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வேண்டும்.  தானியங்கி வண்டி எண் அறிதல், சரக்கு வாகனங்களில் உள்ள பொருட்களின் எடையை அறிதல் போன்றவற்றை புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம்.

அதிகமான வேகத்தில் செல்பவர்கள், ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணியாயதவர்கள், போக்குவரத்து சிக்னல்களை மீறுபவர்கள், மற்ற வாகன ஓட்டிகளை பயமுறுத்தும் வகையில் முந்தி செல்பவர்கள், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துபவர்கள், சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்பவர்கள் என அனைத்து தரப்பினரையும் கண்காணித்து, இது போன்று செய்யும் வாகனங்களையும், வாகன ஓட்டிகளையும், போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே 15 நாட்களுக்குள் அபராதம் விதிக்கலாம் என புதிய நடைமுறை கொண்டுவரப் பட்டுள்ளது.

இது போன்று செயல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு,  போக்குவரத்து காவல் துறையின் மூலம், தேதி, நேரம், இடம் மற்றும் அபராத தொகை  ஆகியவற்றுடன் கூடிய, அபராத சீட்டு மின்னஞ்சல், குறுந்தகவல், அல்லது நேரில் வழங்கப்படும். இந்த அபராத தொகையை, இணையதளம் மூலமாகவோ அல்லது போக்குவரத்து காவல் நிலையங்களிலோ செலுத்தலாம்.

இது போன்ற செயல்களில் ஈடுப்பட்டவர்கள்  வாகனத்தின் உரிமையாளராக இல்லாத பட்சத்தில்   அவர் காவல்துறை அதிகாரி அல்லது மாநில அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் முன், தான் அந்த வாகனத்தை ஓட்டவில்லை என்பதற்கான ஆதாரத்தை காண்பித்து, தான் நிரபராதி என நிரூபிக்கலாம். மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி இந்த புதிய நடைமுறைகள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Previous articleசேலத்தில் முன்விரோதம் காரணமாக வாலிபரை மர்மகும்பல் சரமாரி வெட்டி சாய்த்தனர்!!
Next articleஇந்த எழுத்துக்கள் இனி அரசு வாகனங்களில் இருந்தால் கடும் அபராதம்!! போக்குவரத்து துறை எச்சரிக்கை!!