வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி! பெட்ரோல் விலை 40 ரூபாய் குறைவு!

Photo of author

By Parthipan K

வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி! பெட்ரோல் விலை 40 ரூபாய் குறைவு!

Parthipan K

Motorists rejoice! Petrol price 40 rupees less!

வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி! பெட்ரோல் விலை 40 ரூபாய் குறைவு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து காணப்படுகின்றது. இந்நிலையில் இந்தியாவில் 124 வது நாளாக பெட்ரோல் ,டீசல் ஆகியவற்றின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அதனால்  தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டர் ரூ102 ஆக விற்பனையாகி வருகின்றது. இந்நிலையில் இலங்கையில் நேற்று முதல் பெட்ரோல் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் 92 ரக பெட்ரோலின் விலையில் 40ரூபாய் குறைந்துள்ளது.

அதனால் தற்போது பெட்ரோலின் விலை 410 ரூபாயாக உள்ளது. 95 ரக பெட்ரோலின் விலையில் 30 ரூபாய் குறைகப்பட்டுள்ளது. தற்போது 510 ரூபாயாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற எரிபொருளின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லங்கா ஐ.ஓ.சி  நிறுவனமும் பெட்ரோல் விலையை குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.