இப்படி அறிகுறி இருந்தால் வாய் புற்றுநோய்!! மக்களே எச்சரிக்கை!!

Photo of author

By CineDesk

உடலில் மரபணு மாற்றம் ஏற்பட்டு செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் வளர்ச்சி அடையும் போது புற்றுநோய் ஏற்படுகிறது. புற்றுநோய்களின் ஒரு வகை வாய் புற்றுநோய் ஆகும். வாயில் புற்றுநோய் வருவது தற்போது அதிகரித்து வருகிறது. வாய் புற்றுநோய் என்பது, நாக்கு, வாய், ஈறுகள், நாக்கின் கீழ் மற்றும் அடிப்பகுதி, வாயின் மேல்புறம், மற்றும் தொண்டைப்பகுதி போன்றவற்றில் புற்றுநோய் உண்டாகிறது. அனைத்து வகையான வாய் புற்றுநோய்களும் ஸ்குவாமஸ் செல் கார்சினோமாக்கள் என அழைக்கப்படுகிறது.

 

ஆண்டுதோறும் கண்டுபிடிக்கப்படும் புற்றுநோய்களில் மூன்று சதவீதம் வாய் புற்றுநோய்களாகும். வாய் புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டரியப்பட்டால் சிகிச்சை அளித்து குணமாக்கலாம். வாய் புற்றுநோய் பகுதிகள் மற்றும் அறிகுறிகளை காண்போம்.

 

உள் கன்னத்தில் உருவாகும்

புற்றுநோய் என்பது உள் கன்னத்தை உருவாக்கும் செல்களின் கட்டுப்பாட்டை மீறி கட்டிகள், புண்கள் உருவாகும் போது இந்த நோய் வருகிறது. இதை புக்கால் மியூகோசா புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் அறிகுறிகள்

வாயில் வெள்ளை அல்லது சிவந்த இருண்ட திட்டுகள்

கன்னத்திசுக்களின் உள்ளே கட்டி ஏற்படுவது

வாயில் வலி அல்லது உணர்வு இல்லாமை

தாடையில் வலி மற்றும் வீக்கம்

தொண்டையில் வலி அல்லது ஏதோ சிக்கிய உணர்வு

கடுமையான காது வலி

பற்களை சுற்றி வலி

 

வாய் புற்றுநோய்

 

இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். அதிக மது அருந்துதல், புகையிலை பொருட்களை பயன்படுத்துதல் போன்றவை வாய் புற்றுநோய் உண்டாகும். இதன் அறிகுறி வாயில் புண் உண்டாகி, அது வளர்ந்து கொண்டே போவதாகும்.

 

ஈறுகளில் புற்றுநோய்

 

இந்த புற்றுநோய் மேல் மற்றும் கீழ் ஈறுகளில் உண்டாகும். இதன் அறிகுறிகள் ஈறுகளில் வெள்ளை, சிவந்த கருமை திட்டுகள், ஈறுகளில் ரத்தக்கசிவு மற்றும் வெடிப்பு உண்டாகும்.

 

அண்ணம் புற்றுநோய்

 

வாயின் உட்புறத்தின் மேல்பகுதி அண்ணம் ஆகும். உட்புற வாயின் மேல்பகுதியின் எலும்பு பகுதியை உருவாக்கும் செல்கள் கட்டுப்பாட்டை மீறி வளர்ந்து புண் மற்றும் கட்டிகள் உருவாக்குவதே அண்ண புற்றுநோய் ஆகும். இதன் அறிகுறி வாயின் மேல்புறத்தில் உண்டாகும் புண்களே ஆகும். புற்றுநோய் வளரும்போது புண்களில் இரத்தக்கசிவு ஏற்படலாம்.

 

உதடு புற்றுநோய்

இதுவும் வாய் புற்றுநோய் போன்றதே. புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் உண்டாகிறது. இதில் உதட்டில் புண் ஏற்படுவது, உதட்டில் வலி, கட்டி, ரத்தக்கசிவு போன்றவை அறிகுறிகளாகும்.

 

நாக்கு புற்றுநோய்

நாக்கில் உள்ள இரண்டு பகுதிகளாக வாய்மொழி மற்றும் நாக்கின் அடிப்பகுதி என எந்த பகுதியில் வேண்டுமானாலும் புற்றுநோய் உருவாகலாம். இதன் அறிகுறிகள்

நாக்கில் வெள்ளை மற்றும் சிவப்பு கருமை திட்டுகள்

தொண்டை புண்

நாக்கில் புண் அல்லது கட்டிகள் ஏற்படுவது

உணவை விழுங்கும்போது வலி

நாக்கில் உணர்வின்மை

நாக்கில் இருக்கும் புண்ணிலிருந்து ரத்தக்கசிவு போன்றவை அறிகுறிகளாகும்.

இதை ஆரம்ப கட்டத்தில் அறிந்து சிகிச்சை மேற்கொண்டால் புற்றுநோயை குணப்படுத்த வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.