வாய் ஓரத்தில் உருவாகும் சிவந்த புண்களை மௌவ்த் அல்சர் என்கின்றோம்.இந்த புண்கள் அதிக எரிச்சல் மற்றும் வலியை ஏற்படுத்தும்.இவை வந்துவிட்டால் சூடான மற்றும் காரமான உணவுகளை உட்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.இந்த உதட்டு புண் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை செய்யவும்.
தீர்வு 01:
1)மணத்தக்காளி காய் – ஒரு ஸ்பூன்
2)மோர் – ஒரு கிளாஸ்
முதலில் நீங்கள் ஒரு ஸ்பூன் அளவிற்கு மணத்தக்காளி காய் பறித்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை தண்ணீரில் போட்டு கழுவி மிக்சர் ஜாருக்கு மாற்றிக் கொள்ளுங்கள்.
பின்னர் இதை மைய்ய அரைத்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள்.பிறகு ஒரு கிளாஸ் அளவிற்கு மோர் எடுத்து அதில் ஊற்றி கலந்து பருகினால் மௌவ்த் அல்சர் குணமாகும்.
தீர்வு 02:
1)வெந்தயம் – ஒரு ஸ்பூன்
2)தயிர் – ஒரு கப்
அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை பவுடர் பதத்திற்கு அரைத்து ஒரு கப் கெட்டி தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் மௌவ்த் அல்சர் குணமாகும்.
தீர்வு 03:
1)உப்பு – ஒரு ஸ்பூன்
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு ஸ்பூன் தூள் உப்பு சேர்த்து வாயை கொப்பளித்து வந்தால் மௌவ்த் அல்சர் புண் குணமாகும்.
தீர்வு 04:
1)இளநீர்
2)சியா விதைகள்
இளநீரை கிளாஸிற்கு ஊற்றி அரை தேக்கரண்டி சியா விதை சேர்த்து ஊறவைத்து குடித்தால் மௌவ்த் அல்சர் குணமாகும்.அதேபோல் வெந்தயக்கீரை,மணத்தக்காளி கீரை,நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் சாப்பிட்டு வந்தால் உதட்டு புண் குணமாகும்.