நாக்கில் எச்சில் ஊறும் இறால் மிளகு தொக்கு – சுவையாக செய்வது எப்படி?

0
35
#image_title

நாக்கில் எச்சில் ஊறும் இறால் மிளகு தொக்கு – சுவையாக செய்வது எப்படி?

கடல் இறாலில் அதிக அளவு புரதச்சத்து அடங்கியுள்ளன. அது தவிர, வைட்டமின் டி உள்ளது. மேலும், உடல் எடையை குறைக்க இறால் உதவி செய்கிறது. அதனால், கடல் உணவை விரும்பி உண்ணலாம். மேலும், இறால் சாப்பிடுவதால் சருமம் அழகாக மாறும். இறால்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால்  உங்கள் சருமம் மிளிரும்.

தேவையான பொருட்கள்

இறால் – 2 கப்
வெங்காயம் – 4
தக்காளி – 4
மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
எண்ணெய் – தேவையான அளவு
மல்லி தூள் – 3 ஸ்பூன்
கரம் மசாலா – 2  ஸ்பூன்
சீரகத் தூள் – 2  ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
முழு மிளகு – 4 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது  – 4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
கடுகு – சிறிதளவு

செய்முறை

முதலில் இறாலை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர், மிளகை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர், அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுதை அதில் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர், தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
தக்காள் நன்றாக வதங்கியதும், அதில் தனியா தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
பின்னர், இறால் சேர்த்து நன்றாக கிளறி, தண்ணீர் சேர்க்காமல் மிதமான தீயில் வைத்து இறாலை வேகவிட வேண்டும்.
இறாலிலிருந்து தண்ணீர் வடிந்தவுடன் 10 நிமிடங்கள் வரை வேக விட வேண்டும்.
இறால் வெந்த பிறகு, மிளகு தூள், சீரகத் தூள், கரம் மசாலா, கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான இறால் மிளகுத் தொக்கு ரெடி.

author avatar
Gayathri