தன்னுடைய வாழ்க்கையில் முதல் ஹேர் கட்டிற்கு 20 ரூபாய் நிர்ணயத்தை வசூலித்தவர் இன்று ஒரு ஹேர் கட்டிற்கு 1 லட்சம் ரூபாய் வரை பெறுவதாக தெரிவித்திருக்கிறார்.ஆலிம் ஹக்கீம் என்பவர் தான் தற்பொழுது பிரபலமாக இருக்கக்கூடிய ஹேர் ஸ்டைலிஸ்ட். இவரிடம் திரை பிரபலங்களில் இருந்து கிரிக்கெட் பிரபலங்கள் வரை அனைவரும் லைனில் நின்று முடி வெட்டிக் கொள்வதாக தெரிவித்திருக்கிறார்.
பேட்டி ஒன்று தன்னை குறித்து தெரிவித்த ஆலிம் ஹக்கீம் பேசி இருப்பதாவது :-
தன்னுடைய 9 வயதில் தன்னுடைய தந்தை இறந்து விட்டதாகவும் அதன் பின்பு குடும்பம் நடுத்தெருவிற்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்தார். தன்னுடைய தந்தை பாலிவுட் பிரபலங்களுக்கு ஹேர் ஸ்டைலுக்காக இருந்தவர் என்றும் ஆனால் அவர் இறந்த பின்பு அவருடைய அக்கவுண்டில் வெறும் 13 ரூபாய் மட்டுமே இருந்தது என்றும் ஆலிம் ஹக்கீம் தெரிவித்திருக்கிறார்.
அப்பா இறந்து போனது அவருடைய வேலையை குடும்ப சூழலுக்காக துவங்கியவர் முதலில் முடிவெட்டுவதற்கு 20 ரூபாய் என்றும் ஷாம்பு போட்டு வாஷ் செய்வதற்கு 30 ரூபாய் என்றும் நிர்ணயித்ததாக தெரிவித்திருக்கிறார். அது படிப்படியாக ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஒவ்வொரு தொகை என்பது போல உயர்ந்து இன்று ஒரு ஹேர் கட்டிற்கு 1 லட்சம் ரூபாய் வரை பெறுவதாகவும் தன்னிடம் முடிவெட்டிக் கொள்ள வருவது என்றால் அப்பாயின்மென்ட் வாங்க வேண்டும் என்றும் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கும்பொழுது 1 லட்சம் ரூபாயையும் முன் தொகையாக செலுத்தி விட வேண்டும் என்றும் தெரிவித்திருப்பதாக கூறியிருக்கிறார்.
இவர் பிரபல திரை நடிகர்களான ரஜினிகாந்த், ஷாருக் கான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங் போன்றவர்களுக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்களான எம் எஸ் தோனி மற்றும் விராட் கோலி போன்றவர்களுக்கும் தற்பொழுது தொடர்ந்து ஹேர் கட் செய்து வருவதாகவும் அதிலும் குறிப்பாக எம் எஸ் தோனி அவர்கள் எந்த ஒரு மேட்ச் விளையாட சென்றாலும் குறிப்பாக ஐபிஎல் மேட்சில் தினம் ஒரு ஹேர் ஸ்டைலில் வந்த கலக்குவதற்கு காரணம் தன்னுடைய கைஜாலம் தான் என தெரிவித்திருக்கிறார் பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட்.