கனிம வளங்களின் மீது விதிக்கப்பட்ட வரியை குறைக்க கோரி கல்குவாரி கிரஷர் சங்கத்தின் சார்பில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்களை அமைச்சர் துரைமுருகன் ஏப்ரல் 21ஆம் தேதி ஆகிய நேற்று பேச்சு வார்த்தைக்கு அழைத்து ஏன் வரிவிதிப்பு மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்த முறையான விளக்கங்களை தெரிவித்ததன் பெயரில் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
இது குறித்த கல்குவாரி கிரஷர் சங்கத்தின் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது :-
கனிமவள வரிவிதிப்பானது ஏப்ரல் நாலாம் தேதி போடப்பட்ட நிலையில் அதிகமான வரியால் தொழில் செய்வது மிகவும் சிரமமாக்க மாறியது என்றும் அதை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே இது போன்ற ஒரு வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அமைச்சர் சந்தித்தல் இது குறித்த கேள்வி கேட்ட பொழுது நியாயமான காரணங்களை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறியதோடு கனிமவள வரி விதிப்பை உடனடியாக குறைக்க முடியாது என்றும் அதற்கு சில காலம் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்ததாக கூறியுள்ளனர்.
கனிமவள வரிவிதிப்பை தொடர்ந்த தற்பொழுது எம் சாண்ட், விசாண்ட் மற்றும் ஜல்லி போன்றவற்றின் விலையானது உயர்த்தப்படுவதாக அறிவித்ததோடு இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கல்குவாரி கிரஷர் சங்கத்தின் தலைவர் வேண்டுகோள் வைத்திருக்கிறார். அதன்படி, ஏப்ரல் 22 ஆம் தேதியான இன்று முதல் மேலே குறிப்பிடப்பட்ட அனைத்தும் யூனிட் ஒன்றுக்கு 1000 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது என்றும் பொதுமக்கள் இதற்கு எந்தவித தயக்கமும் காட்டாமல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.