தீபாவளி ரேஸில் இருந்து விலகிய மாநாடு.!! சிம்பு ரசிகர்கள் சோகம்.!!

0
139

மாநாடு திரைப்படம் வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படம் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் தான் மாநாடு. இந்தப் படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் எஸ் ஏ சந்திரசேகர், பாரதிராஜா, பிரேம்ஜி, எஸ் ஜே சூர்யா, கருணாகரன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், இந்தப்படத்தை வி ஹவுஸ் புரோடக்சன் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் மாநாடு திரைப்படம் வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்படம் நவம்பர் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதல பட்டம்யாருக்கு சொந்தம்? சமூகவலைதளங்களில் அடித்துக்கொண்ட சினிமா ரசிகர்கள்!
Next articleஉடல் எடையை குறைத்து மீண்டும் வந்த சினேகா..வைரலாகும் புகைப்படம்.!!