முல்லைப் பெரியாறு அணை விவகாரம்! யாரும் பயம் கொள்ள வேண்டாம் முதலமைச்சர் ஸ்டாலின்!

0
134

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களாக தமிழகத்திலும், கேரளாவிலும், கடுமையான விவாதம் எழுந்து வருகிறது. முல்லை பெரியாறு அணை திறன் சரியில்லை அதனை கைவிட வேண்டும் என்று ஒரு சிலரும், புதிய அணை அமைக்க வேண்டும் என்று ஒரு சிலரும் கேரளாவில் கோரிக்கை வைத்து வருகிறார்கள், அதோடு மலையாள நடிகர்கள் பலர் முல்லை பெரியாறு அணைக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அதோடு தமிழக மக்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வந்து கொண்டிருக்கக் கூடிய அவர்களை தமிழ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.இதற்கு நடுவில் முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் பல கட்ட விவாதங்கள் நடைபெற்றன. இதனால் கடுப்பான நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து இருக்கிறார். அதோடு தமிழக முதலமைச்சர் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு இது தொடர்பாக கடிதம் ஒன்றையும் எழுதி இருக்கிறார்.

இந்த கடிதத்தில் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருப்பதாவது முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை பொறுத்தவரையில் இரண்டு மாநில பொதுமக்களின் நலன் பாதுகாக்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருகின்ற சூழ்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் மிகவும் விரைவாக அதிகரித்து வருகின்றது, அதே நேரம் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் தொடர்பாக வதந்திகளும் பரவி வருகின்றன. இந்த சூழ்நிலையில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு அதிகபட்சமாக தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் ஒன்றை எழுதினார்.

ஆனால் தற்சமயம் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களுக்கு எழுதி இருக்கக்கூடிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது மழை வெள்ளத்தின் காரணமாக, பாதிக்கப்பட்ட கேரள மாநில பொது மக்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறேன் என குறிப்பிட்டிருக்கிறார்.

அத்துடன் முல்லை பெரியாறு அணை விவகாரத்தை பொறுத்தவரை நீர்மட்டம் உயர்ந்து வருவதை நாங்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றோம், எங்களுடைய அதிகாரிகள் உங்கள் குழுவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார்கள், அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி அதாவது நேற்று காலை ஒன்பது மணி நிலவரத்தின் அடிப்படையில் அணையின் நீர்மட்டம் 2300 கியூசெக்ஸ் நீர்வரத்து டன் 136.6 அடி ஆக இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உச்சநீதிமன்றம் அனுமதிக்கப்பட்ட அளவிலேயே இருக்கிறது, அதேபோல மத்திய நீர் ஆணையத்தின் விதிகளின் அடிப்படையில் இருக்கிறது என விளக்கம் கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அதேபோல அணையின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்றம் குறித்த தகவல்களை தொடர்ந்து முன்கூட்டியே எனக்கு தெரிவிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன். ஆகவே முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை பொறுத்தவரையில் தமிழக அரசு இரு மாநில பொது மக்களின் நலனை பாதுகாக்கும் விதத்தில் முடிவுகளை எடுக்கும் என்று உறுதியளிக்கிறேன் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின்.

Previous articleபாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய பள்ளி ஆசிரியை.!! கைது செய்த போலீசார்.!!
Next articleமுன் விரோதம் காரணமாக கழுத்தை அறுத்து கொலை! பட்ட பகலில் வீடு புகுந்து அடாவடி!