முல்லைப் பெரியாறு இவரை கைது செய்யுங்கள்! ஆர்ப்பாட்டக்காரர்கள்!

0
116

முல்லைப் பெரியாறு அணை சுமார் 125 வருடங்கள் பழமையான அணை என்பதால் 152 அடி வரை நீரைத் தேக்கி வைத்தால் அணை உடைந்துவிடும், அதோடு கேரள மாநிலம் இரண்டாக பிளப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. என்பதுதான் கேரள மாநில அரசின் நிலைப்பாடு. கேரளாவில் பருவமழை ஆரம்பித்து சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகின்றது, இதனால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடிக்கு உயர்ந்து இருக்கிறது.

ஆகவே அணையின் நீர்மட்டத்தை குறைக்க ஆண்டிப்பட்டியில் உள்ள வைகை அணைக்கு நீரை திறந்து விட கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். இதற்கு நடுவில் முல்லை பெரியாறு அணையை கைவிட வேண்டும் என்று மலையாள நடிகர்கள் சமூக வலைதளங்களில் இருந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இதில் நடிகர் பிருத்விராஜ் அவர்களும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள், உண்மைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் என்னவாக இருக்கும் என்பதை பொருட்படுத்தாமல் 125 ஆண்டுகள் பழமையான அணை ஒரு செயல் வார்த்தை கட்டமைப்பாக இருக்க காரணமும் மன்னிப்பும் இல்லை நம் அரசியல் மற்றும் பொருளாதாரத்தை ஒருபுறம் வைத்து எது சரியானது என அதனை செய்யும் நேரம் வந்துவிட்டது என தெரிவித்திருக்கிறார்.

சிஸ்டத்தை மட்டுமே நம்ப முடியும் சிஸ்டம் சரியான முடிவை மேற்கொள்ள நாம் பிரார்த்திப்போம் என தெரிவித்திருக்கிறார் அவருடைய இந்த கருத்திற்கும், மலையாள நடிகர்களின் கருத்திற்கும், தமிழ் சினிமா ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார்கள். அதிலும் தன்னை ஒரு மலையாளியாக முன்னிறுத்தி கொள்வதில் தீவிரமான ஆளாக பிரித்திவிராஜ் இருக்கிறார். அவருடைய கருத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் எழத் தொடங்கியிருக்கிறது.

அதேபோல முல்லை பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்றும், புதிய முல்லைப் பெரியாறு அணையை கட்ட வேண்டும் என்றும், கருத்துக்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் தேனி மாவட்டத்தில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியை சார்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். நடிகர் பிரித்விராஜ், கேரளாவை சேர்ந்த வழக்கறிஞர் ரசூல் ஜோய் உள்ளிட்டோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், கேரள சட்டசபையில் உரையாற்றிய மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் முல்லை பெரியாறு அணை தொடர்பாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் உண்மை அல்ல கேரளாவில் மழை தொடர்ந்தால் நிலையான கட்டமைப்பை உருவாக்க மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது. பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்துவது போல பதிவுகள் இடுவார்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முல்லைப் பெரியாறு அணைக்கு தற்சமயம் எந்தவிதமான ஆபத்தும் இல்லை என கூறி இருக்கிறார்.

Previous articleஅதிமுக அரசு சொன்னதால்தான் நாங்கள் அதனை செய்தோம்! அப்பல்லோ மருத்துவமனை அதிர்ச்சித் தகவல்!
Next articleபெற்றோர்களே முன்வாருங்கள்! கோரிக்கை வைத்த அமைச்சர்!