அதிமுக அரசு சொன்னதால்தான் நாங்கள் அதனை செய்தோம்! அப்பல்லோ மருத்துவமனை அதிர்ச்சித் தகவல்!

0
76

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை செய்ய கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்தின் தலைவர் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி பல தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டார். இதில் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் இந்த விசாரணைக்கு முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆஜராகவில்லை. அதேபோன்று ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சமயத்தில் சிசிடிவி காட்சிகள் இல்லாதது பல்வேறு கேள்விகளுக்கு வெளிச்சம் பாய்ச்சியது.

இப்படியான சூழ்நிலையில், விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை சார்பாக மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை அடுத்து ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருந்தது.

இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது, இந்த வழக்கு நேற்றையதினம் அப்பல்லோ மருத்துவமனை சார்பாக அறிவிக்கப்பட்ட பதில்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

அப்பல்லோ மருத்துவமனையின் சார்பாக தெரிவிக்கப்பட்ட பதில் மனுவில் ஆறுமுகசாமி ஆணையத்தின் ஒட்டுமொத்த அணுகுமுறையும் தவறாக இருக்கிறது மருத்துவரீதியாக இந்த ஆணையம் விசாரணையை மேற்கொள்ளவில்லை. இந்த ஆணையத்தில் மருத்துவ வல்லுனர்கள் யாரும் இடம்பெறாத சூழ்நிலையில், மருத்துவரீதியான விவரங்களை எதன் அடிப்படையில் நாங்கள் தெரிவிக்க முடியும் என தெரிவித்து இருக்கிறது.

அப்பல்லோ மருத்துவமனை அழைத்து சிகிச்சைக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் கூட திருப்தி கரத்தை தெரிவித்திருக்கிறார்கள், ஜெயலலிதா மரண வழக்கில் ஏராளமான அரசியல் தலைவர்கள் இன்னும் விசாரிக்க படாமல் இருக்கின்ற சூழ்நிலையில், எங்கள் மருத்துவர்களை மட்டும் விசாரிப்பது ஒருதலைப்பட்சமாக இருக்கிறது என தெரிவித்து இருக்கிறது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம்.

விசாரணை ஆணையத்தின் இந்தப் போக்கு எங்களுடைய நற்பெயர் சார்ந்த விவகாரம் என்ற காரணத்தால், இதனை தொடக்கத்திலேயே எதிர்க்க எங்களுக்கு உரிமை இருக்கிறது எங்களுடைய தரப்பு வாதங்களை நாங்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கின்றோம். இனி விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராக மாட்டோம் என தெரிவித்திருக்கிறது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம். ஆறுமுகசாமி ஆணையம் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை, ஆணையத்தில் நாங்கள் வழங்கும் தகவல் எல்லாம் விசாரணை ஆணையம் வேண்டுமென்றே கசிய விடுகிறது என்று குற்றம்சாட்டி இருக்கிறது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம்.

அதேபோல முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சமயத்தில் அப்போதைய அதிமுக அரசு கேட்டுக் கொண்டதால்தான் சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டன. ஜெயலலிதாவிற்கு ப்ரைவசி தேவைப்படும் என்று அவர்கள் தெரிவித்ததால் தான் நாங்கள் அதனை செய்தோம் என்று கூறப்பட்டுள்ளது.