நுகர்வோரின் உடைய ஆதார் எண்ணை மின் இணைப்புகளுடன் இணைக்கும் படி தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்திருந்த நிலையில், தற்பொழுது அதற்கான பணி நடைபெற்று வருகிறது. எனினும் இதில் நுகர்வோர்களுக்கு பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. நுகர்வோர்களின் சந்தேகங்களுக்கு அதிகாரிகள் வழங்கிய பதில் குறித்து இந்த தொகுப்பில் காண்போம்.
சில மின்சார நுகர்வோர்கள் ஒரு வீட்டிற்கு பல இணைப்புகளை பெற்றுள்ளனர். மேலும் சில மின்சார நுகர்வோர்கள் பல வாடகை வீடுகளுக்கு ஒரே பெயரில் மின் இணைப்புகளை பெற்றுள்ளனர். இவ்வாறு உள்ள நிலையில் இவை அனைத்திற்கும் ஒரே ஆதார் கார்டையும் எண்ணையும் பயன்படுத்த முடியுமா என்று கேள்வி மின் நுகர்வோர்களிடம் எழுந்திருக்கிறது.
இதற்கு அதிகாரிகள் அளித்துள்ள பதில் பின்வருமாறு :-
தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் ஒரு நுகர்வோர் ஒரு வீட்டிற்கு பல இணைப்புகளை பெற்றிருந்தால் அனைத்திற்கும் ஒரே ஆதார் எண்ணை கொடுக்கலாம் என தெரிவித்திருக்கின்றனர்.
மேலும், பல வாடகை வீடுகளை கொண்டிருக்கக்கூடிய நுகர்வோர்கள் அந்தந்த வாடகை வீடுகளில் வசிக்கக் கூடியவர்களின் ஆதார் எண்களை மின் இணைப்புடன் இணைக்கலாம் என்றும் தெரிவித்து இருக்கின்றனர். பல மின்னிணைப்புகளை ஒரு நுகர்வோரின் ஆதார் எண்ணில் இணைப்பதன் மூலம் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் தெளிவுபடுத்தி உள்ளனர்.
இந்த செயல்பாடுகளானது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை ஒழுங்குபடுத்துவதற்காகவே நடைமுறைப்படுத்துகிறது என்றும் கூறியுள்ளனர். மேலும் இது தொடர்பான வசதிகள் அனைத்தும் தமிழ்நாடு மின்சார வாரியத்தை இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.