பண வரவு பன்மடங்கு அதிகரிக்க.. இந்த பொருட்களை பீரோவில் வையுங்கள்!

Photo of author

By Divya

பண வரவு பன்மடங்கு அதிகரிக்க.. இந்த பொருட்களை பீரோவில் வையுங்கள்!

Divya

பண வரவு பன்மடங்கு அதிகரிக்க.. இந்த பொருட்களை பீரோவில் வையுங்கள்!

நம் வாழ்க்கைக்கு மூல தனமாக உள்ள பணத்தை சம்பாதிக்க தான் இரவு பகல் பாராமல் பலர் கஷ்டப்பட்டு வருகின்றனர். ஆனால் எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் அவை ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது… தன்னால் சேமிக்கவே முடியவில்லை என்ற வருத்தம் பலரிடமும் இருக்கிறது.

குறிப்பாக மிடில் கிளாஸ் மக்களுக்கு பணப் பிரச்சனை ஒரு பெரும் பிரச்சனையாகவே இருக்கின்றது. பணத்தை கஷ்டப்பட்டு சேமித்தும் அதை தங்கள் ஆசைகளுக்கு நிறைவேற்ற முடியாமல் எதிர்பாராத செலவிற்கு போய்விடுகிறது என்ற ஆதங்கம் பலரிடம் இருக்கத் தான் செய்கிறது.

இந்த பணப் பிரச்சனை தீர உங்கள் வீட்டு பீரோ அல்லது நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் இவ்வாறு செய்யுங்கள் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

பணம் வைக்கும் இடத்தில் சுத்தமாகவும், வாசனையாகவும் இருக்க வேண்டும். வாசனை என்றால் செயற்கை வாசனை கிடையாது. மகா லட்சுமி தாயாருக்கு உகந்த இயற்கை வாசனை கொண்ட பொருள்.

மகா லட்சுமி தாயாருக்கு உகந்த பொருட்கள்…

*பச்சை கற்பூரம்
*ஏலக்காய்
*சோம்பு

ஒரு மஞ்சள் துணியில் இந்த பொருட்களை போட்டு மூட்டை போல் கட்டிக் கொள்ளவும். அந்த மூட்டைக்கு மஞ்சள் குங்குமம் வைத்து பணம் உள்ள இடத்தில் வைக்கவும். இந்த மூட்டையில் உள்ள பொருட்களை மாதம் ஒருமுறை மாற்றவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பண வரவு அதிகரிக்கும்.