இன்று வாழ்வா.? சாவா.? போட்டியில் மும்பை vs ராஜஸ்தான் அணிகள்.!! டாஸ் வென்ற மும்பை பௌலிங் தேர்வு.!!

0
81

இன்று நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற
மும்பை கேப்டன் ரோஹித் சர்மா பௌலிங் தேர்வு.

நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று சார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 51வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா பௌலிங் தேர்வு.

இவ்விரு அணிகளும் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம், இன்றைய தினம் வெற்றி பெறும் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும், தோல்வி அடையும் அணி வெளியேறும் அதன் காரணமாக இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை நேருக்குநேர்,

இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 24 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் மும்பை 12 போட்டிகளிலும், ராஜஸ்தான் 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவில்லை.

மும்பை அணி வீரர்கள்;

ரோகித் சர்மா(கே), இஷான் கிஷன் (வி.கீ), சூரியகுமார் யாதவ், சவுரப் திவாரி, பொல்லார்ட், ஹார்டிக் பாண்டியா, ஜேம்ஸ் நீசம் , ஜெயந்த் யாதவ் , கோல்டர் நைல், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா

ராஜஸ்தான் அணி வீரர்கள்;

எவின் லெவிஸ், ஜஸ்வல், சஞ்சு சாம்சன், ஷிவம் டுபே, கிளன் பிலிப்ஸ், டேவிட் மில்லர், ராகுல் திவட்டியா, ஸ்ரேயாஸ் கோபால், குல்தீப் யாதவ் , சக்காரியா, முஸ்தபிசுர் ரஹ்மான்.