போலீசார் மீது கொலை தாக்குதல்! பதிலடியாக சுட்டு படுகொலை!

போலீசார் மீது கொலை தாக்குதல்! பதிலடியாக சுட்டு படுகொலை!

பிரான்ஸ் நாட்டில் கெனிஸ் நகரில் காவல்நிலையத்தில் போலீசார் சிலர் எப்போதும் போல இன்று காலை ரோந்து பணிக்கு செல்வதற்காக காரில் ஏறிப் புறப்பட்டனர். அப்போது அந்த காவல் நிலையத்திற்குள் இருந்த புது நபர் ஒருவர் போலீஸ் உட்கார்ந்திருந்த காரின் கதவைத் திறந்தார்.

மேலும் உடனடியாக தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்த போலீஸ் அதிகாரி மீது தாக்குதலும் நடத்தினார். சற்றும் எதிர்பாராத இந்த  தாக்குதலில் அந்த அதிகாரி படுகாயம் அடைந்தார். இதனை தொடர்ந்து முன் சீட்டில் இருந்த மற்றொரு போலீஸ் அதிகாரி மீதும் அந்த மர்ம நபர் கத்திக்குத்து தாக்குதல் நடத்த ஆரம்பித்தார்.

உடனடியாக சுதாரித்த பின்சீட்டில் அமர்ந்திருந்த போலீஸ்காரர்கள் துரிதமாக செயல்பட்டு கத்திக்குத்து நடத்திய நபரை உடனடியாக, தங்களிடம் இருந்த துப்பாக்கியால் பாதுகாப்பு கருதி சுட்டனர். போலீஸ் அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த மர்ம நபர் உயிரிழந்து விட்டார். அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

மேலும் இந்த தாக்குதலில் காயமடைந்த போலீஸ் அதிகாரி சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் யார் என்ற காரணத்தையும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment