நகைக்கான கொலையா?காதலுக்கான கொலையா?மர்மம் தெரியாமல் தவிக்கும் போலீசார்!

0
138
Murder for jewelry? Murder for love? Police who suffer without knowing the mystery!
Murder for jewelry? Murder for love? Police who suffer without knowing the mystery!

நகைக்கான கொலையா?காதலுக்கான கொலையா?மர்மம் தெரியாமல் தவிக்கும் போலீசார்!

இந்த கொரோனா காலக்கட்டத்தில் மக்கள் வெளியே செல்லவே அச்சமுற்ற நிலையில் கொலை,கொள்ளை சம்பவங்கள் நடந்த வண்ணமே தான் உள்ளது.அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்ட பகலில் நடந்த கொலை அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.புதுக்கோட்டை மாவட்டம்,ஆலங்குடி சாலை அசோக் நகரில் உள்ளது பொன்நகர்.இப்பகுதியாய சேர்ந்தவர் பழனியப்பன்.இவர் மின்வாரியா ஊழியராக பணிபுரிந்து வந்தார்.இவரது மனைவி பெயர் சிவகாமி.இவர்களுக்கு லோகப்பிரியா என்ற மகள் உள்ளார்.மின்வாரிய ஊழியரான பழனியப்பன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.அதனால் அவரது மனைவிக்கு அதே மின்வாரியத்தில் உதவியாளர் பணி வழங்கப்பட்டது.அவர் மின்வாரியத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

சிவகாமி தினந்தோறும் காலை வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்புவோர்.ஆனால் நேற்று மாலை வீடு திரும்பும்போது அவருக்கு பேரதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.வேலை முடிந்து அவர் வீடு திரும்பி வீட்டில் பார்க்கும் போது அவரது மகள் வீட்டினுள் கழுத்தறுக்கப்பட்டு சடலமாக கிடந்தார்.அதை பார்த்த சிவகாமி கத்தி கூச்சலிட்டார்.இவர் கூச்சலிட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.அதன்பின் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து லோகப்பிரியாவின் சடலத்தை கைபற்றினர்.அதன்பின் மோப்ப நாயைக்கொண்டு ஆதரங்களை கைப்பற்றினர்.அங்கிருக்கும் கைரேகைகள் எடுக்கப்பட்டது.அவ்வீட்டில் உள்ள 50 சவரன் நகை மற்றும் வீட்டின் வெளியே இருந்த ஸ்கூட்டி காணவில்லை.அதன்பின் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் லோகப்பிரியா தனது உறவினர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.அவருடன் அவர் கடைசியாக பேசியுள்ளார்.அவரை அழைத்து விசாரித்ததில் கடைசியாக என்னிடம் பேசியபோது அவருடைய பெரியப்பா மகன் வீட்டிற்கு வருவதாக கூறினார்,நான் பிறகு கூப்பிடுகிறேன் என்று கூறி அழைப்பை துண்டித்துவிட்டார்.

என போலீசார் விசாரணையில் கூறியுள்ளார்.அவர் கூறியது பொறுத்து அவரது பெரியப்பா மகனையும் காணவில்லை.அவரது பெரியப்பா மகன் நகை பணத்திற்காக கொலை செய்தாரா?அல்லது காதால் விவகாரம் பிடிக்காமல் கொலை செய்துவிட்டு,நகையை எடுத்து ஓடியது போல் திசையை மாற்றுகிறார என்பது போலீசார் விசாரணையில் மர்மமாக உள்ளது.

Previous articleமுடிவுக்கு வந்தது மேற்குவங்க தேர்தல்! சுறுசுறுப்பானது தமிழக அரசியல் களம்!
Next articleமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிறப்பித்த அதிரடி உத்தரவு!