மருத்துவமனை படுக்கையில் வைத்து நோயாளி படுகொலை! 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

மதுரையில் அரசு மருத்துவமனையின் சிகிச்சை பிரிவிற்குள்ளே நுழைந்து நோயாளியை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகர் பி.டி.காலனி பகுதியில் வசித்து வந்தவர் முருகன்.  இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பின் ஜாமீனில் வெளியே வந்த சில நாட்களிலேயே அவருக்கு உதவும் வகையில், பிரச்சனை ஏற்பட பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு கை, கால்களில் முடக்குவாதம் ஏற்பட மதுரை அரசு மருத்துவமனையில் 101வது வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் முருகன் அனுமதிக்கப்பட்டிருந்த 101 வது வார்டில் நுழைந்து அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி உள்ளனர். இதில், படுகாயம் அடைந்த அவருக்கு மருத்துவர்களும், செவிலியர்களும் தீவிர சிகிச்சை அளித்த போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

பின் இது குறித்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் மனைவியிடம் விசாரிக்கையில், தனது கணவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அருண்பாண்டி, விக்னேஷ்வரன், கரண் உள்ளிட்டவை மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்கையில், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதாவது கடந்த ஆகஸ்ட் மாதம் முருகன் தரப்பினர் சிலர், அதே பகுதியில் பி.டி.காலனி பகுதியில் வசித்து வரும் ஒருவரை கொலை செய்து விட்டதாகவும், அந்த கொலைக்கு பழி தீர்ப்பதற்காகவே இந்த சம்பவம் அரங்கேறி உள்ளதாகவும் காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கொலை குறித்து மூன்று பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவமனை சிகிச்சை பிரிவில் நுழைந்து நோயாளியை படுக்கை கட்டிலில் வைத்தே அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.