80 நாட்களுக்கு பிறகு கோவில்கள் திறப்பு! உள்ளே நுழைய சான்றிதழ் கட்டாயம்!

0
88

கேரளாவில் 80 நாட்களுக்கு பிறகு இன்று கோவில்நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவில் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் கிட்டத்தட்ட ஒன்பது நாட்களுக்குப் பிறகு ஐந்தாம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கோவில்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

அதன்படி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கோவில்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில், கேரள மாநிலத்தில் 80 நாட்களுக்கு பிறகு இன்று கோவில்கள், ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள் உள்ளிட்டவை திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

கேரளாவில் மிகவும் புகழ் பெற்ற கோவிலான குருவாயூர் கோவிலில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாகவும், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் 300 பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் பதிவு மூலம் அனுமதிக்கப்பட்டனர். கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும்.

கோவிலுக்குள் நுழையும் வழியில் வைக்கப்பட்டிருக்கும் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்திக் கொண்டு சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து சுத்தபத்தமாக சுவாமியை தரிசனம் செய்து சென்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பின் வழங்கப்படும் சான்றிதழை காண்பித்த பின்புதான் உள்ளே அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 14ஆம் தேதி முதல் 28-ம் தேதி வரையில் மாதப்பிறப்புக்காக கோவில் நடை திறக்கப்பட உள்ளநிலையில், பத்து பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேபோல் கொச்சியில் தேவாலயங்களும் திறக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் பிரார்த்தனை நடைபெற்றது. கேரளாவின் பெரும்பாலான பகுதிகள் அடைக்கப்பட்டு இருந்தாலும், ஒரு சில பகுதிகள் மட்டும் திறக்கப்பட்டு அங்கும் சமூக இடைவெளியுடன் தொழுகையானது நடைபெற்று வருகிறது.

author avatar
Parthipan K