ரயில் நிலையத்தில் சுவாதியை நினைவு படுத்துவது போல் மீண்டும் ஒரு கல்லூரி மாணவி கொலை! காரணம் காதலா அல்லது வேறு ஏதேனுமா?

0
147
Murder of a college student again as a reminder of Swati at the train station! Is the reason romance or something else?
Murder of a college student again as a reminder of Swati at the train station! Is the reason romance or something else?

ரயில் நிலையத்தில் சுவாதியை நினைவு படுத்துவது போல் மீண்டும் ஒரு கல்லூரி மாணவி கொலை! காரணம் காதலா அல்லது வேறு ஏதேனுமா?

சென்னை குரோம்பேட்டை ராதாநகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்வேதா. 25 வயதான இவர் தாம்பரம் தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியன் பயிற்சி படித்து வருகிறார். இந்நிலையில் ராமச்சந்திரன்  என்பவருடன் கல்லூரி வாசலில் ஸ்வேதா நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராமச்சந்திரன் ஸ்வேதாவின் கழுத்தில் குத்தி கொலை செய்ததாக தெரிகிறது. மேலும் தனது கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் ராமச்சந்திரன். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மேலும் ஸ்வேதாவின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காதல்  பிரச்சினையில் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல் கடந்த 2016 ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவங்கள் அனைத்தும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை மட்டுமே உறுதி செய்கின்றன. மேலும் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியும் ஆக்கி உள்ளன.

Previous articleஆண் நண்பன் செய்த செயலினால் சீரழிந்த சிறுமி! 13 வயது சிறுமிக்கு 26 பேர் செய்த பாலியல் வன்கொடுமை!
Next articleதொடர்ந்து 5 நாட்களாக வெளியேறும் எரிமலை குழம்பு! மக்களின் பாதுகாப்புக்கு அச்சம்!