ஒரு அப்பனுக்கு பிறந்த முருகன் தமிழ் கடவுள் விநாயகர் இந்தி கடவுளா? தைப்பூசத்திற்கு விடுமுறை அளிப்பது சனாதனத்தை புகுத்தும் செயல் இதன் காரணமாக நாம் தமிழர்களாக தலை நிமிர்ந்து நின்று விடுவோமா ? என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
திராவிடர் கழகம் சார்பாக நடந்த ஒரு நிகழ்ச்சியில், உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உரையாற்றும்போது ஒரு அப்பனுக்கு பிறந்த முருகன் தமிழ் கடவுள் விநாயகர் இந்திக்கடவுளா ? தைப்பூசத்திற்கு விடுமுறை அளிப்பது சனாதனத்தை புகுத்தும் செயல்பாடு இதன் காரணமாக, நாம் அனைவரும் தமிழர்களாக தலைநிமிர்ந்து நின்று விடுவோமா? குலதெய்வ வழிபாட்டில் கூட சனாதனம் புகுந்துவிட்டது இதன் காரணமாக பல தெய்வ வழிபாடு வந்துவிட்டன. இந்துக்கள் என்ற ஒரே நோக்கத்தில் அனைவரையும் வீழ்த்தி இருக்கிறது சனாதன சக்திகள் என்று தெரிவித்திருக்கிறார் திருமாவளவன்.
அவருடைய இந்த கருத்திற்கு தமிழகம் முழுவதுமே கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன. திருமாவளவனுக்கு தைரியமிருந்தால் அல்லாவையும், ஏசுவையும் தமிழ் கடவுளா ? என கேட்டு விட இயலுமா இந்து கடவுளை மட்டும் இழிவு செய்யும் திருமாவளவனுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
தேர்தல் நெருங்கி விட்டாலே திருமாவளவனுக்கு இதுதான் வாடிக்கை என்று தெரிவிக்கிறார்கள் ஒரு சிலர் இவர் இவ்வாறு ஆரம்பித்து வைக்கும் ஒரு சில கருத்துக்கள் மூலமாக ஆங்காங்கே இந்த கருத்துக்கள் பரவ தொடங்குவதாக சொல்லப்படுகிறது.
இதன்மூலம் இந்துக்களை சிறுமைப்படுத்தி சிறுபான்மையினரை குஷிப்படுத்தும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் திருமாவளவன் என்று தெரிவிக்கிறார்கள் இந்துத்துவாவாதிகள்.
எதிர்க் கட்சியான திமுகவிற்கு சிறுபான்மையினர் ஓட்டுக்களை வாங்கிக் கொடுப்பதில் இதுபோன்று இந்துக்களை சிறுமைப்படுத்தி பேசி அதன் மூலமாக சிறுபான்மையினரை மகிழ்விக்கும் திருமாவளவனுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கின்றது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இப்படி ஆங்காங்கே இவர் பேசும் கருத்துக்கள்தான் தேர்தல் நெருங்க, நெருங்க சிறுபான்மையினர் இடையே அதிகமாக பரவ தொடங்குவதாகவும், பரவலாக பேசப்படுகிறது. இதுபோன்ற இந்துக்களுக்கு எதிரான பேச்சுக்கள் மூலம் சிறுபான்மையினரின் வாக்குகளை கவர்ந்து விடலாம் என்பதே திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவனை போன்ற ஒரு சிலருக்கு மனக்கணக்காக இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த தேர்தலிலாவது மக்கள் இதனை சரிவர புரிந்து கொண்டு தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றுவார்களா என்று சமூக சேவகர்களும், அரசியல் நோக்கர்களும், ஆதங்கம் தெரிவிக்கிறார்கள்.