திமுகவை அழிப்பதற்கு வெளியிலிருந்து எவறும் செயல்பட தேவையில்லை !அமைச்சர் சி.வி. சண்முகம் கிண்டல்!

0
366

திமுகவை அழிப்பதற்கு அந்த கட்சியின் தலைவரே போதும் நாம் எதையுமே செய்ய தேவை இல்லை என அமைச்சர் சி.வி .சண்முகம் தெரிவித்திருக்கிறார்.

பண்ருட்டியில் நடந்த அதிமுகவின் செயல்வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றிய சி.வி. சண்முகம் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா போன்ற மிகப் பெரிய ஆளுமை இல்லாத ஒரு சூழ்நிலையில், நாம் இந்தத் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். ஆகவே இந்த தேர்தலில் நாம் முழுமூச்சுடன் பணி செய்ய வேண்டும். இது நமக்கு மிகவும் முக்கியமான ஒரு தேர்தல் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து தேர்தல் பணியை செய்தால் மட்டுமே நாம் வெற்றியடைய முடியும். ஒரு ஜனநாயக கட்சியில் கட்சியினருக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜமான ஒன்று. ஆனாலும் அதனை சற்று ஒதுக்கி வைத்து விட்டு தேர்தல் பணியில் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். அதற்கான தருணம் தான் இது என்று தெரிவித்திருக்கிறார்.

நம்முடைய கட்சியிலே, மட்டுமே சாதாரண தொண்டர்களும் ஒரு உயர்வான நிலைக்கு வர இயலும். ஏனென்றால், இது தொண்டர்களால் வழிநடத்தப்பட்டு கொண்டிருக்கும் ஒரு கட்சி. இதுவரையில் தலைவர்கள் வேண்டுமென்றால் அங்குமிங்கும் இடம் மாறி கட்சிக்கு துரோகம் செய்து இருக்கலாம். ஆனாலும் தொண்டர்கள் எங்குமே சென்றது கிடையாது. கட்சியில் இருக்கின்ற சீனியர்கள் இளைஞர்களுக்கு வழிவிட்டு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அவர்கள் தான் கட்சியை வழிநடத்தி செல்ல வேண்டியவர்கள் எதிரணியின் வியூகத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

திமுக ஒரு குடும்ப கட்சி அந்த கட்சியின் தொண்டர்கள் யாரும் உயர்ந்த நிலைக்கு செல்ல இயலாது. திமுகவை நாம் யாரும் அழிக்கத் தேவையில்லை அந்த கட்சியினை அந்த கட்சியின் தலைவரே அழித்துவிடுவார். நாம் அமைதியாக இருந்தால் போதும் என்று அமைச்சர் சி.வி .சண்முகம் தெரிவித்திருக்கிறார்.

Previous articleஒரு அப்பனுக்கு பிறந்த முருகன் தமிழ் கடவுள் விநாயகர் இந்தி கடவுளா? வேலையை ஆரம்பித்த திருமாவளவன்!
Next articleஇந்த குரங்கா எய்ட்ஸ் நோய்க்கு காரணம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here