Cinema

மாஸ்டர் பட நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் அனிருத்.!!இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!

தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இவர்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கிய ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகம் எங்கும் மெகா ஹிட்டானது. அதன்பிறகு ஒய் திஸ் கொலை வெறி பாடல் 3 திரைப்படத்தில் வைக்கப்பட்டது.

முதல் படத்திலேயே அனைத்து பாடல்களும் ஹிட்டானதால் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தது. தனுஷின் வேலையில்லா பட்டதாரி, மாரி, எதிர்நீச்சல், கத்தி உள்ளிட்ட திரைப்படங்களில் ரசிகர்களை கவரும் பாடல்களை கொடுத்தவர் அனிருத் அதன் பின் அவர்களது கூட்டணி பிரிந்து விட்டது.

அதன் பிறகு விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட மற்ற முன்னணி நடிகர்களுக்கும் இசையமைத்து தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக மாறியுள்ளார்.

இவர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திற்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்திற்கும் இசையமைத்த பாடல்கள் வைரலானது. இதையடுத்து தற்போது உலக நாயகன் கமலஹாசனுக்கு இந்தியன்-2 வில் இசையமைத்து வருகிறார். தற்போது விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்திற்கும் இவர்தான் இசையமைத்து வருகிறார்.

சொந்த வாழ்க்கையில் சில நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படும் அனிருத் ஏற்கனவே பிரபல பாடகி மற்றும் நடிகையான ஆண்ட்ரியாவை காதலித்ததாகவும், இவர்கள் இருவரும் லிப் கிஸ் கொடுத்து கொண்ட புகைப்படம் இப்போதும் சமூக வலைதளங்களில் உள்ளது.

 

அதன்பிறகு டாக்டர் படத்தில் அவருடன் இணைந்து செல்லம்மா பாடலை பாடிய ஜோனிடா என்பவருடன் அவருக்கு காதல் ஏற்பட்டதாக கிசுக்கிசு வெளியானது.

இந்த நிலையில் தற்போது மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனனுடன் நெருக்கமாக அமர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் அடுத்தது இவரா என கிண்டலடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஆயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை எதுவும் செய்ய முடியாது! – அமைச்சர் சி.வி.ஷண்முகம்!

சாலைகளை பெயர்த்தெடுக்காமல் புதிய சாலைகள் போட்டால் புகார் தெரிவிக்கவும்! வெளியான புதிய உத்தரவு!

Leave a Comment