1)அல்சர்
வெண்பூசணி காயை ஜூஸாக அரைத்து தேன் கலந்து பருகி வந்தால் வயிற்றுப்புண்கள் குணமாகும்.வாய்ப்புண் பிரச்சனை இருப்பவர்கள் வெண்பூசணியை அரைத்து வாய்ப்புண் மீது பூசி குணப்படுத்திக் கொள்ளுங்கள்.
2)வாய் துர்நாற்றம்
ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் முழுமையாக அகலும்.அதேபோல் பட்டை,கிராம்பு போன்றவற்றை மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் அகலும்.
3)மலச்சிக்கல்
சீரகம் மற்றும் ஏலக்காயை சம அளவு எடுத்து மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பின்னர் அரைத்த கலவையை அதில் போட்டு கொதிக்க வையுங்கள்.
இந்த பானம் நன்றாக கொதித்து வந்த பிறகு கிளாஸிற்கு வடிகட்டி பருகுங்கள்.இப்படி செய்தால் மலச்சிக்கல் பாதிப்பு முழுமையாக குணமாகும்.
4)கிட்னி கற்கள்
கல்லுருக்கி இலை மற்றும் ரணக்கள்ளி இலையை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் சிறுநீரக கற்கள் தானாக கரைந்துவிடும்.
அதேபோல் மாவிலங்கப்பட்டை மற்றும் தொட்டால் சிணுங்கி வேர் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள்.இதை பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள்.இந்த பானம் நன்றாக கொதித்து வந்த பிறகு வடித்து பருகி வந்தால் கிட்னி கற்கள் கரையும்.
5)தோல் பிரச்சனை
குப்பைமேனி இலை மற்றும் உப்பு ஆகியவற்றை சிறிதளவு எடுத்து பேஸ்டாக அரைத்து தோலில் தடவினால் அரிப்பு,எரிச்சல் முழுமையாக குணமாகும்.
6)சர்க்கரை நோய்
பாகல் இலை மற்றும் நெல்லிக்காய் ஆகியவற்றை அரைத்து ஜூஸாக சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
7)வீக்கம்
உடலில் வீக்கம் உள்ள இடத்தில் முருங்கை இலையை அரைத்து கட்டினால் அவை சீக்கிரம் குணமாகும்.
8)ஆண்மை
முருங்கை பூவை பசும் பாலில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.முருங்கை பூவில் டீ போட்டு குடித்தால் உடல் சூடு தணியும்.
9)அஜீரணக் கோளாறு
இஞ்சியை இடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் அஜீரணக் கோளாறு முழுமையாக குணமாகும்.
10)தூக்கமின்மை
வறுத்த சீரகத்தை வெந்நீரில் கலந்து பருகினால் தூக்கமின்மை பிரச்சனை முழுமையாக குணமாகும்.