அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!! சுரைக்காயுடன் சேர்த்து உண்ணக் கூடாத உணவுகள் எவை தெரியுமா?

Photo of author

By Vijay

அதிக நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்று சுரைக்காய். இது உடல் பருமன், சர்க்கரை நோய் போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.இந்த சுரைக்காயில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கிறது.இருப்பினும் சுரக்கையுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடக் கூடாது.இது பற்றிய முழு விவரம் இதோ.
சுரைக்காய் விலை மலிவான காய்கறியாகும். இதில் இரும்பு, வவைட்டமின்கள், தாதுக்கள், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவு உள்ளது.
சுரைக்காயில் கூட்டு, பொரியல், சட்னி, தோசை என்று பல வகை உணவுகள் செய்து உண்ணப்படுகிறது. சருமப் பிரச்சனையை போக்க, உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க சுரைக்காயை அவசியம் உட்கொள்ள வேண்டும். ஆனால் சுரக்கையுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் அது உடலில் பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும்.
சுரைக்காயுடன் சேர்த்து உட்கொள்ள கூடாத உணவுகள்:
சுரைக்காய் கூட்டு போன்றே முட்டைகோஸிலும் கூட்டு செய்து உண்ணப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு உணவுகளையும் ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ள கூடாது. இதனால் வாயுத் தொல்லை, வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
சுரைக்காயுடன் புளிப்பு நிறைந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் வயிறு பிடிப்பு, வயிற்று வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
அதேபோல் சுரைக்காயுடன் பால், நெய், வெண்ணெய், பன்னீர் போன்ற உணவுப் பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் வயிற்று வலி, வாயுத் தொல்லை, வயிறு மந்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். சுரைக்காயுடன் பீட்ரூட் சேர்த்து சாப்பிட்டால் சரும வெடிப்பு ஏற்படும்.