அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.. இது தெரியாமல் இனி மாத்திரை சாப்பிடாதீங்க!!

0
879

இன்றைய காலத்தில் மருந்தே உணவு என்று மனிதர்கள் வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருக்கின்றனர்.முன்பெல்லாம் சளி,இருமல் போன்ற சாதாரண பாதிப்பை குணமாக்க பல கை மருந்துகள் நம் வசம் இருந்தது.

 

கற்பூரவல்லி இலை சாறு,வெற்றிலை சாறு,வேப்பிலை சாறு போன்றவற்றை வைத்து சிறு சிறு நோய்களை குணப்படுத்திக் கொண்டோம்.ஆனால் இன்றைய காலத்தில் கை மருந்து பயன்பாடு குறைந்து ஆங்கில மருந்து மாத்திரைக்கு மாறிவிட்டோம்.

 

சளிம்,இருமல்,காய்ச்சல்,பிபி,சர்க்கரை போன்ற பல நோய்கயை மாத்திரை மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.சிலர் மாத்திரையை மிட்டாய் போன்று மென்று சாப்பிடுவார்கள்.சிலர் வாயில் சிறிது ஊற்றி மாத்திரை போடுவார்கள்.இன்னும் சிலர் மாத்திரை போட்ட பிறகு தண்ணீர் குடிப்பார்கள்.

 

இவ்வளவு காலமாக மாத்திரை பயன்படுத்தி வரும் நாம் அதை எவ்வாறு உட்கொள்ள வேண்டுமென்று அறியாமல் இருக்கின்றோம்.மாத்திரையை தண்ணீர் இன்றி உட்கொண்டால் செரிமானப் பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படக் கூடும்.

 

மாத்திரை விழுங்கும் பொழுது அவசியம் தண்ணீர் குடிக்க வேண்டும்.குறிப்பாக சூடு நீர் பருகினால் மாத்திரை எளிதில் கரைந்துவிடும்.மாத்திரை விழுங்கும் பொழுது குறைந்தது ஒரு கிளாஸ் தண்ணீராவது பருக வேண்டும்.

 

மாத்திரை சாப்பிட்ட உடனே தூங்கும் பழக்கம் இருந்தால் அதை தவிர்க்க வேண்டும்.மாத்திரை உட்கொண்ட உடனே உறங்கினால் செரிமானப் பிரச்சனை உண்டாகும்.உணவிற்கு முன் சாப்பிட வேண்டிய மாத்திரை என்றால் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.மாத்திரை சாப்பிட்ட பிறகு தண்ணீர் மட்டுமே பருக வேண்டும்.ஜூஸ்,பால் போன்ற பானங்களை பருகக் கூடாது.

Previous articleமுகத்தை அழகுற செய்யும் சந்தனம்!! சரும வறட்சி இருப்பவர்கள் பயன்படுத்தலாமா?
Next articleஆண்மை குறைபாட்டை நீக்கும் பூனைக்காலி எனும் வயாகரா!! இதை எப்படி பயன்படுத்துவது?