இன்றைய காலத்தில் இளம் தலைமுறையை அதிகம் பாதிக்கும் நோயாக மாரடைப்பு உள்ளது.மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கத்தால் மாரடைப்பு ஏற்படுகிறது.தற்பொழுது இந்த நோய் பாதிப்பின் அதிகரிப்பு தீவிரமாக உள்ளது.
30 வயதிற்குள் இருப்பவர்களுக்கே இந்த இதய நோய் ஏற்படுகிறது.இதன் காரணமாக கொடிய நோயான மாரடைப்பு தற்பொழுது சாதாரண ஒரு நோய் பாதிப்பாக மாறிவிட்டது.வயதானவர்களுக்கு மட்டும் ஏற்படும் நோயாக இருந்த நிலையில் தற்போதைய வாழ்க்கை முறையில் வயது பேதமின்றி அனைவருக்கும் வரக் கூடிய நோயாகவே இது மாறிவிட்டது.
இதய நோய்களில் மாரடைப்பு,மார்பு வாலி,இருதய அடைப்பு என்று பல வகைகள் இருக்கின்றது.இதில் மாரடைப்பு பாதிப்பை சில அறிகுறிகள் வைத்து முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்.
மாரடைப்பு அறிகுறிகள்:-
1)மார்பு பகுதியில் ஊசி குத்தல் வலி
2)மூச்சடைப்பு
3)மயக்க உணர்வு
4)கணுக்கால் வீக்கம்
5)தாடை வலி
6)தோள்ப்பட்டை வலி
7)அதிகமாக வியர்த்தல்
8)குளிர் உணர்வு
9)கழுத்து வலி
மாரடைப்பு பாதிப்பு யாருக்கு வர வாய்ப்பிருக்கிறது?
**நீரிழிவு நோய்
**இரத்த அழுத்தம்
**புகைப்பழக்கம்
**உடல் பருமன்
**மன அழுத்தம்
மாரடைப்பு வந்தவர்களுக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும்?
ஒருவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு உடனடி மருத்துவ சேவையை வழங்க வேண்டும்.மாரடைப்பு தீவிரத்தை குறைக்க அவருக்கு ஆஸ்பிரின் மாத்திரை கொடுக்கலாம்.
மாரடைப்பு ஏற்பட்டவரை பதட்டமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அவர்களை நடக்க வைக்கக் கூடாது.ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க உடனடியாக 108 ஆம்புலன்ஸை அழைக்க வேண்டும்.ஆம்புலன்ஸ் வரும் வரை பாதிக்கப்பட்டவரை பதட்டமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு CPR சிகிச்சை அளிக்கலாம்.இதுபோன்ற உதவிகள் செய்வதன் மூலம் மாரடைப்பு உயிரிழப்பை தடுக்க முடியும்.