குலதெய்வத்தின் மகிமையை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்..!!

Photo of author

By Divya

குலதெய்வத்தின் மகிமையை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்..!!

**உங்கள் குல தெய்வத்தை தவிர உயர்ந்த தெய்வம் இந்த உலகில் இல்லை.

**அவரவர் குலதெய்வத்தின் படத்தினை வீட்டில் வைத்து வணங்குவது அவசியம்.

**குலதெய்வ அனுக்கிரகம் இல்லையேல் எந்த தெய்வ அனுக்கிரகமும் இல்லை.

**இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு அடுத்துதான்.

**குலதெய்வம் நம் கண்ணின் இமைப் போல் காத்து நிற்கும்.

**குலதெய்வத்தின் அருளால் நம் இன்னல்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிப்போல் விலகிவிடும்.

**குலதெய்வ வழிபாட்டை மறப்பது தாயை பட்டினி போடுவதற்கு சமம்.

**குலம் தெரியாமல் போனாலும் குலதெய்வம் தெரியாமல் போகக் கூடாது. குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்கக் கூடாது.

**குலதெய்வத்தால் ஆகாத காரியம் இல்லை.

**எமன் கூட குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும்.

**குலதெய்வத்தை வணங்கினால் கோடி நன்மை உண்டு.

**காசுக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை. குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை.

**உங்கள் வம்சத்தை காக்க முதலில் ஓடி வரும் உயிர் தெய்வமே குலதெய்வம் தான்.