ஆண்மை குறைவை முற்றிலும் சரி செய்ய கட்டாயம் இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்!!

Photo of author

By Gayathri

ஆண்மை குறைவை முற்றிலும் சரி செய்ய கட்டாயம் இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்!!

Gayathri

Must take these foods to cure impotence completely!!

ஒழுங்காக கீரை, காய்கறி சாப்பிட்டாலே, உயிர் அணு செம்மையாகச் சுரக்கும்!

உயிர்ச்சத்து… விதைகளிலும், மொட்டுக்களிலும், வேர்களிலும் பொதிந்து இருக்கும் என கருதியதாலோ என்னவோ, சித்த மருத்துவம் பல தாவர விதைகளை, மொட்டுக்களை, வேர்களை ஆண்மை அபிவிருத்திக்கான மருந்துகளில் அதிகம் சேர்க்கிறது. சப்ஜா விதை, வெட்பாலை விதை, பூனைக்காலி விதை, மராட்டி மொக்கு, மதனகாமேஸ்வரப் பூ, அமுக்குராங்கிழங்கு, சாலாமிசிரி வேர், நிலப்பனைக் கிழங்கு என அதன் பட்டியல் நீளும். வளம் குன்றிய தேரி நிலத்தில் வளரும் நெருஞ்சில் முள்ளின் சப்போனின்கள், விந்தணுக்களை உற்பத்தி செய்யும் செர்டோலி செல் பாதிப்பைச் சீராக்கும் என்கிறது மருத்துவத் தாவரவியல்.

உயிர் அணுவைப் பெருக்கும் மெனு!

மாதுளை வெல்கம் ட்ரிங்க், முருங்கைக் கீரை சூப், மாப்பிள்ளைச் சம்பா சோற்றுடன் முருங்கைக் காய் பாசிப்பயறு சாம்பார், நாட்டு வெண்டைக்காய்ப் பொரியல், தூதுவளை ரசம், குதிரைவாலி மோர் சோறு… முடிவில் தாம்பூலம்… இவை புது மாப்பிள்ளைகளுக்கான அவசிய மெனு.

நாட்டுக்கோழியும் சிவப்பு இறைச்சிகளும் காமம் பெருக்கும் காம்போ உணவுகள்.

சித்த மருத்துவம் :-

‘காமம் பெருக்கிக் கீரைகள்’ எனப் பட்டியலிட்டுச் சொன்ன முருங்கை, தூதுவளை, பசலை, சிறுகீரை ஆகியவற்றில் ஒன்றை, பருப்பும் தேங்காய்த் துருவலும் கொஞ்சம் நெய்யும் சேர்த்து சமைத்துச் சாப்பிடுவது விந்து அணுக்களின் எண்ணிக்கையை நிச்சயம் உயர்த்தும்.

கவனம்!

1.நீச்சல் பயிற்சி, ஆண்மையைப் பெருக்கும் உடற்பயிற்சி.

2.’குடி, குடியைக் கெடுக்கும்; குழந்தை யின்மையைக் கொடுக்கும்’ என ஷேக்ஸ்பியர் முதல் மாத்ருபூதம் வரை சொல்லிச் சென்றிருக்கிறார்கள்

3.உடல் எடை அதிகரிப்பில் புதைந்துபோகும் ஆண் உறுப்பும் (Buried Penis), கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோயில் ஏற்படும் ஆண்மைக்குறைவும் (Erectile Dysfunction) சமீபத்தில் ஆண்களுக்கான பெரும் நோய்ச் சிக்கல்கள். இரண்டுமே முறையான சிகிச்சையால் சரிசெய்யலாம்.

4.நல்லெண்ணெய்க் குளியல், பித்தத்தைச் சீராக்கி விந்து அணுக்களைப் பெருக்கும் பாரம்பர்ய உத்தி!