ஓடிவாங்க! ஓடிவாங்க! என் கையில எல்லாம் ஒட்டுது! காந்தமாக மாறிய தாத்தா பின்னணி!

Photo of author

By Kowsalya

மகாராஷ்டிராவில் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரு 70 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதருக்கு அவருக்கு உடல் காந்தமாக மாறி வீட்டில் உள்ள இரும்பு பொருட்கள் எல்லாம் அவர் மீது ஒட்டும் அளவிற்கு மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மகாராஷ்டிராவில் உள்ள சிட்கோ அப்பகுதியில் வசித்து வரும் அரவிந்த் சோநார் என்பவர் இவருக்கு 71 வயது. இவர் கடந்த மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி முதல் தவணை போட்டுக் கொண்டுள்ளார். கடந்த ஜூன் இரண்டாம் தேதி இரண்டாவது தவணையைப் போட்டுக் கொண்டுள்ளார்.முதல் டோஸ் தடுப்பு ஊசி அரசு மருத்துவமனையில் போட்டுக்கொண்ட அரவிந்த், இரண்டாவது டோஸ் தனியார் மருத்துவமனையில் போட்டுக் கொண்டுள்ளார்.

 

திடீரென அவர் ஊசி போட்டுக் கொண்ட கையில் இரும்பு பொருட்கள் எல்லாம் ஒட்டுவதாக தகவல்கள் வெளியாகியது. அவரது வீட்டிலுள்ள பொருட்கள் காயின்கள் கரண்டிகள் ஸ்பூன்கள் எல்லாம் கையில் காந்தம் போல் ஒட்டி உள்ளது. இதனால் பதற்றமடைந்த அரவிந்த் சோனாரின் வீட்டார்கள் தனியார் மருத்துவமனைக்கு தகவல் சொல்லி உள்ளனர்.

 

தொடர்ந்து டாக்டர்கள் அவர் வீட்டுக்கு வந்து ஏன் எதனால் ஏற்பட்டது? என்ன காரணம் ? என்று அவரை பரிசோதித்தனர்.அரவிந்த் சோனாவின் நிலை குறித்த அதிகாரிகள் கேட்ட பொழுது டாக்டர்கள் இப்பகுதியில் உள்ள 3.5 லட்சம் பேர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். இது போல் யாருக்கும் இந்த மாதிரியான ஒரு நிலை ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை, என மருத்துவர்கள் கூறினார்கள்.

 

 

இது குறித்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நாளிதழ்களுக்கு விபரத்தை சொல்லி உள்ளனர். கையில் இரும்பு பொருட்கள் ஓட்டுவது சாதாரணமான விஷயமல்ல. இதை சீக்கிரமாக கவனிக்க வேண்டும். உடம்பில் எந்த பிரச்சனை ஏற்பட்டதால் இந்த மாதிரியான காந்தம் பொருட்கள் ஓட்டும் நிலை ஏற்பட்டுள்ளது, என்று பரிசோதிக்க வேண்டும். இதற்கும் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்று மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளார்கள்.