எப்பொழுதும் என் கணவர் விட மாட்டார்.. தாய்ப்பாலை திருடி குடித்து விடுவார் – பிரபல ஹீரோ மனைவி ஓபன் டாக்!!

Photo of author

By Rupa

எப்பொழுதும் என் கணவர் விட மாட்டார்.. தாய்ப்பாலை திருடி குடித்து விடுவார் – பிரபல ஹீரோ மனைவி ஓபன் டாக்!!

Rupa

Updated on:

My husband always won't let go.. He steals breast milk and drinks it - famous hero's wife open talk!!

 

 

என்னுடைய கணவர் தாய்ப்பாலை திருடி குடிப்பார் என்றும் அதனால் நான். தாய்ப்பாலை மறைத்து வைப்பேன் என்றும் பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா அவர்களின் மனைவி தாஹிரா காஷ்யப் அவர்கள் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டிருக்க இது குறித்து நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா அவர்களிடம் கேட்டபொழுது வேடிக்கையான பதிலை கூறியுள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு விக்கி டோனர் என்ற திரைப்படத்தில் நடித்து பாலிவுட் திரையுலகில் அறிமுகமான நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா அவர்கள் தொடர்ந்து பதாய் ஹோ, டிரீம் கேர்ள், அந்தாதுன், ஆர்டிகிள் 15 போன்ற பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர். கடைசியாக டிரீம் கேர்ள் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார்.

நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா அவர்கள் தன்னுடைய சிறு வயது தோழியும் காதலியுமான தாஹிரா காஷ்யப் அவர்களை 2008ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்க ஆயுஷ்மான் குர்ரானா அவர்களின் மனைவி தாஹிரா காஷ்யப் அவர்கள் கணவர் என்னுடைய தாய்ப்பாலை திருடி குடித்துள்ளார் என்று தான் எழுதிய புத்தகம் ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

தாஹிரா காஷ்யப் அவர்கள் ஒரு எழுத்தாளர். இவர் கடந்த 2021ம் ஆண்டு வெளியிட்ட ‘ஒரு தாயாக இருப்பதன் 7 பாவங்கள்’ என்ற புத்தகத்தில் தன்னுடைய கணவர் ஆயுஷ்மான் குர்ரானா அவர்கள் புரோட்டீன் ஷேக்குகளுக்காக தாய்ப்பாலை திருடி குடித்துள்ளதாகவும் அவரிடம் இருந்து தாய்ப்பாலை மறைத்து வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த புத்தகத்தில் தாஹிரா காஷ்யப் அவர்கள் “என்னுடைய கணவர் ஆயுஷ்மான் குர்ரானா அவர்கள் படுக்கை அறையில் புரோட்டீன் ஷேக்கை குடித்துக் கொண்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது நான் அவரிடம் என்னுடைய தாய்ப்பாலை காணவில்லை என்று கூறினேன். அதற்கு அவர் சிரித்துக் கொண்டே ‘தாய்ப்பால் சராசரியான வெப்பநிலையுடன் இருந்தது. தாய்ப்பால் சத்துக்கள் நிறைந்தது. இதனால் நான் தாய்ப்பாலை குடித்து விட்டேன் என்று கூறினார். அவரிடம் இருந்து தாய்ப்பாலை பாதுகாக்க நான் மறைத்து வைத்துக் கொண்டு இருந்தேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து இது குறித்து நடிகர். ஆயுஷ்மான் குர்ரானா அவர்களிடம் கேட்டபோது அதற்கு அவர் “படிப்பவர்களுக்கு செய்தியாக இது ஒரு பொழுது போக்காக இருக்கலாம். ஆனால் நான் தனிப்பட்ட நபர். நான் என்னைப்பற்றி எந்த தகவலையும் யாரிடமும் சொல்ல மாட்டேன். நான் தனிமை விரும்பி. ஆனால் என்னுடைய மனைவி என்னை போல் இல்லை.

என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியோ என்னை பற்றியோ பேசுவது பிடிக்காது. நாம் ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் வித்தியாசமாக இருக்கின்றோம். இது ஒரு சிலருக்கு பொழுது போக்காக இருக்கும். நான் என்னுடைய மனைவி எழுதிய புத்தகத்தை படிக்கவில்லை. எனக்கு எதுவும் தெரியாது. என்னுடைய மனைவிக்கு வேண்டிய விஷயங்களை அவரே செய்வார்” என்று குறிப்பிட்டுள்ளார்.