சினிமாவில் நடிகர் வடிவேலு அவர்களின் காமெடி என்பது இன்றளவும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டதாகவே இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக மீம்ஸ் என்றாலே வடிவேலு இல்லாமல் இல்லை என்பது போல மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு செல்லப்பிள்ளையாகவே அவர் இருக்கிறார் என்று கூட சொல்லலாம். அவர் சினிமாவை விட்டு விலகியது மீண்டும் சினிமாவிற்குள் நுழைந்தது அரசியலில் தேவை இன்றி வார்த்தைகளை விட்டது அதனால் அவர் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைகள் என அனைத்தும் நாம் அறிந்தவையே. ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலு அவர்கள் வடிவேலு என்ற பெயர் அவமானமாக பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்த நடிகர் வடிவேலு பேசி இருப்பதாவது :-
சமீபத்தில் தான் ஊருக்கு சென்று இருந்ததாகவும் ஊருக்கு சென்ற பொழுது அங்கு ஒரு அம்மா தன்னிடம் வந்து ஒரு நிகழ்வு ஒன்றினை பகிர்ந்ததாகவும் வடிவேலு அந்த நிகழ்வினை விவரித்து இருக்கிறார். அதாவது ஒருவர் சிறையிலிருந்து விடுபட்டு வெளியே வந்த மற்றொருவரிடம் பணம் கேட்டதாகவும் அவர் பணம் தர மறுக்கவே மாலை 5 மணிக்கு உன்னை கொலை செய்து விடுவேன் அதற்குள் பணத்தை கொடு என மிரட்டி இருக்கிறார். இது போன்ற ஒரு சமயத்தில் பணத்தை தர மறுத்தவருடைய தாயார் வரவும் அவரிடம் நடந்த அனைத்தையும் அந்த மற்றொருவர் தெரிவித்திருக்கிறார். அப்பொழுது பணம் தர மறுத்தவரின் தாயார் அவன் கிடக்கிறான் வடிவேலு, நீ வா வீட்டிற்கு செல்லலாம் என தன் மகனை அழைத்துள்ளார். உடனே யாரைப் பார்த்து வடிவேலு என சொன்னாய் என பொங்கி எழுந்து கொலை செய்து விடுவதாக மிரட்டிய நபர் கத்தி கூச்சலிட்டதாக அந்த அம்மா அவர்கள் வடிவேலுவிடம் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்ட நடிகர் வடிவேலு அவர்கள் தன்னுடைய பெயர் இன்று பலரால் அவமானமாக பார்க்கப்படுவதாகவும் வடிவேலு என்று கூப்பிட்டாலே அதை மிகப்பெரிய அவமானமாக இளைஞர்கள் பார்ப்பதாகவும் தெரிவித்து மனம் வருந்தியுள்ளார்.