என் பேரு படையப்பா பாட்டில் வரும் குழந்தை யார் தெரியுமா! இந்த நடிகை தான் அந்த குழந்தையா !!

0
37
#image_title
என் பேரு படையப்பா பாட்டில் வரும் குழந்தை யார் தெரியுமா! இந்த நடிகை தான் அந்த குழந்தையா
நடிகர் ரஜினிகாந்த் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள என் பேரு படையப்பா திரைப்படத்தில் வரும் குழந்தை யார் என்றால் சன் டிவியில் சீரியலில் நடித்து வரும் நடிகை ஒருவர்தான் என்று தகவல் கிடைத்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் படையப்பா திரைப்படம் உருவானது. இந்த திரைப்படத்தில் நடிகர்கள் ரம்யா கிருஷ்ணன், மறைந்த நடிகை சௌந்தர்யா, செந்தில், நாசர், ரமேஷ் கண்ணா, நாசர், அப்பாஸ், மறைந்த நடிகர் சிவாஜி கணேசன்,  மறைந்த நடிகர் மணிவன்னண் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
படையப்பா திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றி மூலமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் இருவர்களும் நண்பர்களாக மாறினர். அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படத்தையும் கே.எஸ் ரவிக்குமார் இயக்கினார். இதன் பிறகு பல வருடங்கள் கழிந்து லிங்க் திரைப்படத்தை இயக்கினார். லிங்கா திரைப்படம் தோல்வியை தழுவியது. இந்நிலையில் படையப்பா திரைப்படத்தில் என் பேரு படையப்பா பாட்டில் வரும் குழந்தை யார் என்று தெரியவந்துள்ளது.
படையப்பா திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள என் பேரு படையப்பா பாட்டில் ‘பாசமுள்ள மனிதனப்பா மீசை வச்ச குழந்தையப்பா’ என்று வரிகள் வரும். அந்த வரிகளில் ஒரு குழந்தையின் முகத்தை காட்டுவார்கள். அந்த குழந்தை தற்பொழுது சன்டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா சீரியலில் நடித்த நடிகை ஹிமா பிந்து என்று தெரிய வந்துள்ளது.
நடிகை ஹிமா பிந்து அவர்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் பல சீரியல்களில் நடிகை ஹிமா காந்த அவர்கள் பிசியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் அந்த குழந்தை தான் இவரா என்று ஆச்சரியத்துடன் குழந்தையாக இருக்கும் நடிகை ஹிமா பிந்து அவர்களின் புகைப்படத்தை வைத்து பார்த்து வருகின்றனர்.