#Breaking: 10 5% வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு- முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!!

0
33
breaking-reservation-for-10-5-vanniars-chief-minister-stalin-alone
breaking-reservation-for-10-5-vanniars-chief-minister-stalin-alone

#Breaking: 10 5% வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு- முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!!

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது அதிமுக மற்றும் திமுக என்று ஆட்சி மாறிய சூழலிலும் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டா கனியை போலவே உள்ளது.கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இருந்த பொழுது 10 புள்ளி 50 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டை போராடி வென்றனர். அந்த இட ஒதுக்கீடானது செயல்பாட்டிற்கு வருவதற்கு முன்பே உயர்நீதிமன்றத்தில் பலர் மனு அளித்து அதற்கு தடை விதிக்க நேரிட்டது.

மேற்கொண்டு அதன் மீது மேல்முறையீடு செய்த பொழுது, வன்னியர்களுக்கான உண்மை தரவுகள் அளித்த பிறகு இந்த இட ஒதுக்கீட்டை செயல்படுத்தலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதனையடுத்து திமுக ஆட்சியைப் பிடித்திருக்கும் பட்சத்தில் தற்பொழுது வரை இதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாமக நிறுவனர், தலைவர் என்று இருவரும் மாறி மாறி கண்டனம் தெரிவித்தும் கடிதம் அனுப்பியும் எந்த ஒரு பயனும் தற்பொழுது வரை இல்லை. அதுமட்டுமின்றி இதர மாநிலங்களில் மத்திய அரசின் எந்த ஒரு போதனையும் இன்றி அரசே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அவர்களுக்கு உண்டான இட ஒதுக்கீட்டை வழங்குகின்றது.

ஆனால் தமிழக அரசோ சப்பை கட்டும் விதமாக பல காரணங்களை தெரிவிக்கிறதே தவிர்த்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. ஆளும் கட்சி நினைத்தால் குறைந்த நாட்களிலேயே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி மேற்கொண்டு உரிய தரவுகளை திரட்டி வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுக்கலாம்.

ஆனால் ஆளும் கட்சியான திமுகவிற்கு அதில் துளி கூட விருப்பமில்லை.ஏனென்றால் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் திருத்தி அமைக்கப்பட்டு வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கிடைத்துவிடும் என்று எண்ணி இருந்த பலரின் எதிர்பார்ப்பு அடியோடு நொறுங்கியது.வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யக்கோரி பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் தெரிவித்திருந்தது.ஆனால் ஆணையமோ எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் இருந்ததையடுத்து 6 மாத காலாம் கால அவசகாசம் கொடுத்தது.

இந்த கால அவகாசம் எதற்கு என பாமக தரப்பிலிருந்து கேட்ட பொழுது கூட மழுப்பும் படியான பதில்கள் தான் வந்தது .சமீபத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் முதல்வரை நேரடியாக சந்தித்து இது குறித்து பேசியனார். இதனையடுத்து இன்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள்வன்னியர்களுக்கான  இட ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனையை மேற்கொண்டுள்ளார்.