கமலை விட பெரிய ஹீரோவாக வருவேனா என கேட்ட ரஜினி….. அதற்கு ஸ்ரீதேவி என்ன சொன்னார் தெரியுமா?

0
85
#image_title

கமலை விட பெரிய ஹீரோவாக வருவேனா என கேட்ட ரஜினி….. அதற்கு ஸ்ரீதேவி என்ன சொன்னார் தெரியுமா?

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் தற்போது மிகப்பெரிய ஸ்டார் நடிகர்களாக வளம் வருபவர்கள். அதில் நடிகர் கமல்ஹாசன் தனது 6 வயதிலிருந்தே சினிமாத்துறையில் நடிக்க தொடங்கியவர். சிறு வயதிலிருந்தே தற்போது வரை தனது நடிப்பிற்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து 1975 இல் இருந்து 1983 வரை அபூர்வ ராகங்கள், ஆடுபுலி ஆட்டம், இளமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். ரஜினியும் கமல்ஹாசனும் இணைந்து நடித்த பெரும்பாலான படங்களில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க ரஜினிகாந்த் வில்லனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

70 காலகட்டங்களில் ரஜினியை விட கமல்ஹாசனே அனுபவம் நிறைந்தவராக திகழ்ந்ததால் கமல்ஹாசன் ரஜினியை விட 5 மடங்கு சம்பளம் வாங்கினார். ஆனால் இன்று இருவருமே சினிமாவில் எட்டாத உயரத்தை அடைந்துள்ளனர். அதன்படி உலக நாயகன் என்றால் அது கமல்ஹாசன் தான் என்றும் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான் என்றும் ரசிகர்கள் இருவரையும் கொண்டாடி வருகின்றனர்.

ஆண் நடிகர்களில் ரஜினி, கமல் போல நடிகை ஸ்ரீதேவியும் இவர்களுக்கு இணையான ஸ்டார் அந்தஸ்தினை பெற்றிருந்தார். ரசிகர்களின் கனவு நாயகியாகவும் திகழ்ந்தவர். அந்த வகையில் மூன்று முடிச்சு, 16 வயதினிலே, தாய் இல்லாமல் நான் இல்லை உள்ளிட்ட படங்களில் ரஜினி, கமல் மற்றும் ஸ்ரீதேவி ஆகிய மூவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1977-ல் வெளியான 16 வயதினிலே திரைப்படம் மூவருக்குமே மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ரஜினி, கமல், ஸ்ரீதேவி மூவரையுமே வித்தியாசமான பரிமாணத்தில் காட்டி இருந்தார் இயக்குனர் பாரதிராஜா. மேலும் இது போன்ற படங்களில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவியை விடவும் நடிகர் ரஜினி குறைவான சம்பளமே வாங்கினாராம். இதுகுறித்து மறைந்த நடிகை ஸ்ரீதேவி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், ” ஏற்கனவே கமல்ஹாசன் அவர்கள் ஸ்டார் நடிகர். அப்போது மூன்று முடிச்சு படத்தில் நான் புதுமுகம். ரஜினி அவர்களும் புது முகம்தான். கமல்ஹாசன் அவர்களுக்கு ரூ. 3000 சம்பளம் வழங்கப்பட்டது. எனக்கு ரூ. 5000 கொடுத்தார்கள். ரஜினி அவர்களுக்கு ரூ. 2000 கொடுத்தார்கள். ரஜினி எனது அம்மாவிற்கு மிகவும் நெருக்கமானவர். ஒரு நாள் நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ரஜினி, கமல்ஹாசனை போல பெரிய ஹீரோவா, பெரிய ஸ்டாராக என்னால் வர முடியுமா என்று கேட்டார். கண்டிப்பாக வருவீர்கள் என்று நான் கூறினேன்” என்று ரஜினி குறித்து பேசியுள்ளார்.