“என் அரசியல் யாரையும் சார்ந்து இருக்கப்போவதில்லை”.. “புதுச்சேரி முதல்வரை சந்தித்த பின் நடிகர் பார்த்திபன் பேச்சு”!!

0
101
"My politics will not depend on anyone".. "Actor Parthiban's speech after meeting Puducherry Chief Minister"!!
"My politics will not depend on anyone".. "Actor Parthiban's speech after meeting Puducherry Chief Minister"!!

“80ஸ்” களிலிருந்து தற்போதுவரை பல கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் பிரபல நடிகரும், இயக்குனருமான “பார்த்திபன்”, இவர் சில தினங்களுக்கு முன் “புதுச்சேரி” சட்டசபை வளாகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் புதுச்சேரி “முதலமைச்சர் ரங்கசாமி” அவர்களை சந்தித்தார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்வரிடம் புதுச்சேரி கடற்கரையில் படம் எடுப்பதற்க்காக வசூலிக்கப்படும் கட்டணத்தை குறைக்கப்பட்டால், படப்பிடிப்புகள் அதிக அளவில் நடைபெறும் மற்றும் சுற்றுலாவும் மேம்படும் என்று கூறியதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் இந்த வருடம் “விவாகரத்து வருடம்” போல இருக்கிறது, அதான் சினிமாத்துறையில் நிறைய விவாகரத்து சம்மந்தமான செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. நான் “ஏ.ஆர். ரகுமான்” சாறுடன் பழகியுள்ளேன், அவர் மிகவும் தூய்மையானவர், அவரோடு “22 வருடங்கள்” பழகி இருக்கிறேன், அவர் சிறந்த மனிதர், அவரை போல வேறு யாரும் உலகில் இருக்கமாட்டார்கள். இதை அறிந்து தான் விவாகரத்து கேட்ட அவரது மனைவியே, யாரும் அவரை பற்றி தவறாக பேசவேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

அவசர பட்டு கருத்து குறிவிட்டேனோ!, என்று தோன்றுகிறது, அவர்கள் விஷயத்தில் நாம் பேசியிருக்க கூடாதோ!, என்று அவரே கூறிக்கொண்டார்.

விஜய் அரசியலை பற்றி நிருபர் கேள்வி எழுப்ப, அதற்கு பார்த்திபன் அவர்கள், “ரஜினி, கமல்” ஆகியோர் வரும்போது,இவர்கள் வந்து என்ன செய்து விட போகிறார்கள் எனற விமர்சனங்கள் மக்கள் மத்தியில் இருந்தது. அந்த விமர்சனங்கள் இப்பொது விஜக்கும் உள்ளது, ஆனால் “விஜயின் அரசியலை” நான் தவிர்க்க முடியாத அரசியலாக பார்க்கிறேன். விஜய் அவர்களின் கட்சி வளர்ச்சி என்பது அபரிவிதமாக உள்ளது.

என்னுடைய படமான “புதிய பாதை” தொடங்கி நிறைய படங்களின் நானும் அரசியல் பேசியிருக்கிறேன். எனக்கும் அரசியலில் நிறைய ஆர்வமும், நோக்கமும் உள்ளது, “நானும் ஒருநாள் அரசியல் கட்சி” ஆரம்பிப்பேன், “என் அரசியல் யாரையும் சார்ந்து இருக்காது”. எனவே எனக்கும் அரசியல் ஆசை இருக்கிறது. இப்போதைக்கு எனக்கு அந்த என்னம் இல்லை என்று தெரிவித்தார்.

Previous articleசிரியாவில் வெடித்த உள்நாட்டு போர்!! ரஷ்யா தலையிட்டால் பிராந்திய போராகும் பதற்றம்!!
Next articleதந்தையின் சொத்தில் மகளுக்கு என்ன உரிமை? அதிர்ச்சியில் ஆழ்த்தும் உண்மைகள்!!