என்னது ராஷ்மிகா முன்னாள் காதலனுடன் டச்சுல தான் இருக்காங்களா! அப்போ விஜய் தேவரகொண்டாவோட நிலைமை என்ன?

என்னது ராஷ்மிகா முன்னாள் காதலனுடன் டச்சுல தான் இருக்காங்களா! அப்போ விஜய் தேவரகொண்டாவோட நிலைமை என்ன?

சமீப காலத்தில் ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கிசுகிசு ஒன்று பரவி வந்தது.

அவ்வாறே விஜய் தேவரகொண்டாவும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏதோ ஒரு பெண்மணியின் கையைப் பிடித்துக் கொண்டிருப்பது போல் புகைப்படத்தை பதிவிட்டு, இதற்கான அறிவிப்பை விரைவில் அறிவிக்கின்றேன் என்று தெரிவித்திருந்தார். அந்த புகைப்படத்தில் இருந்த கை ராஷ்மிகாவின் கை தான் என்று சமூக வலைத்தளங்களில் அவர்களது ரசிகர்கள் கிசுகிசுப்பை ஏற்படுத்தினர்.

ஒருபுறம் இது டிரெண்டாக பேசப்பட்டாலும், மற்றொருபுறம் ரஷ்மிகாவின் முன்னாள் காதலனான ரஷீத் செட்டி அளித்த பேட்டியானது தற்போது வைரலாகி வருகிறது.

ரஷித் செட்டி அளித்த பேட்டியில், நானும் ரஷ்மிகாவும் இப்போது வரை டச்சில் தான் உள்ளோம் என்றும், படங்கள் வெளியாகும் போது நாங்கள் ஒருவருக்கொருவர் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வோம் என்றும் அவர் கூறியிருந்தார்.

மேலும் ராஷ்மிகாவிற்கு திரையுலகில் பல கனவுகள் இருப்பதாகவும், அதையெல்லாம் அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டு “நேஷனல் கிரஷ்”ஆகியுள்ளார் எனவும் அவர் புகழ்ந்து பேசினார்.

இவரது இந்த பேட்டியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.