என் மண் என் மக்கள் இரண்டாம் கட்ட பயணம்!! அண்ணாமலை யாத்திரை செய்யும் இடங்கள் அறிவிப்பு!!

Photo of author

By Sakthi

என் மண் என் மக்கள் இரண்டாம் கட்ட பயணம்!! அண்ணாமலை யாத்திரை செய்யும் இடங்கள் அறிவிப்பு!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் மேற்கொள்ளும் என் மண் என் மக்கள் யாத்திரையின் இரண்டாம் கட்ட பயணம் தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பாத யாத்திரை செல்ல திட்டமிட்டிருந்தார். அதன்படி என் மண் என் மக்கள் என்ற பெயர் வைக்கப்பட்ட பாத யாத்திரையின் முதல் கட்ட பயணம் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி நெல்லையில் முடிந்தது.

இதையடுத்து இரண்டாம் கட்ட என் மண் என் மக்கள் யாத்திரையை வரும் செப்டம்பர் 4ம் தேதி அண்ணாமலை அவர்கள் தொடங்கவுள்ளார். செப்டம்பர் 4ம் தேதி தொடங்கும் இரண்டாம் கட்ட பயணம் செப்டம்பர் 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தொடர்ந்து 19 நாட்கள் அண்ணாமலை அவர்கள் யாத்திரை செய்யவுள்ள இடங்கள் பற்றிய தகவல்களை என் மண் என் மக்கள் யாத்திரை பொறுப்பாளர் கே.எஸ் நரேந்திரன் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

அதன்படி வருகிற செப்டம்பர் 4ம் தேதி தென்காசி தொகுதிக்கு உட்பட்ட பகுதியான ஆலங்குளத்தில் யாத்திரையை அண்ணாமலை அவர்கள் தொடங்குகிறார். அதைத் தொடர்ந்து 5ம் தேதி கடையநல்லூர், வாசுதேவ நல்லூர் ஆகிய பகுதிகளிலும் செப்டம்பர் மாதம் 6ம் தேதி ராஜபாளையம், ஸ்ரீவில்லி புதூர் ஆகிய பகுதிகளிலும் அண்ணாமலை அவர்கள் யாத்திரை செய்யவுள்ளார்.

அதைத் தொடர்ந்து செப்டம்பர் 7ம் தேதி உசிலம்பட்டியிலும், ஆண்டிப்பட்டியிலும் செப்டம்பர் 8ம் தேதி கம்பம், போடிநாயக்கனூர் ஆகிய பகுதிகளிலும், செப்டம்பர் 9ம் தேதி பெரியகுளத்திலும், 10ம் தேதி கொடைக்கானலிலும் 13ம் தேதி ஆத்தூர் மற்றும் நிலைக்கோட்டையிலும் யாத்திரை செய்யவுள்ளார்.

அதைத் தொடர்ந்து செப்டம்பர் 14ம் தேதி நத்தம், திண்டுக்கல் ஆகிய பகுதிகளிலும், செப்டம்பர் 15ம் தேதி வேடச்சந்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளிலும் செப்டம்பர் 16ம் தேதி பழனியிலும் யாத்திரையை அண்ணாமலை அவர்கள் மேற்கொள்ளவுள்ளார்.

பின்னர் நான்கு நாட்கள் கழிந்து செப்டம்பர் 21ம் தேதி காங்கேயம் மற்றும் தாராபுரம் ஆகிய பகுதிகளில் என் மண் என் மக்கள் யாத்திரையை தொடங்கும் அண்ணாமலை அவர்கள் தொடர்ந்து செப்டம்பர் 22ம் தேதி மடத்துக்குளம், உடுமலைப் பேட்டையிலும், செப்டம்பர் 23ம் தேதி வால்பாறை மற்றும் பொள்ளாச்சியிலும், செப்டம்பர் 24ம் தேதி தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளிலும் யாத்திரை மேற்கொள்கிறார்.

இதையடுத்து செப்டம்பர் 25ம் தேதி கோவை மாவட்டம் தெற்கு பகுதியிலும், சிங்காநல்லூரிலும், செப்டம்பர் 26ம் தேதி கோவை வடக்கு பகுதியிலும், கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளிலும், செப்டம்பர் 27ம் தேதி கூடலூர், ஊட்டி ஆகிய பகுதிகளிலும், செப்டம்பர் 28ம் தேதி குன்னூர், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளிலும் அண்ணாமலை அவர்கள் பாதயாத்திரை மேற்கொண்டு இரண்டாம் கட்ட யாத்திரையை முடிக்கவுள்ளார்.