தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட மைனா நந்தினி!

Photo of author

By Kowsalya

சரவணன் மீனாட்சியில் தொடங்கி இன்று கலக்கப்போவது யாரு மற்றும் பாண்டியன் ஸ்டோர் ஆகிய சீரியல் மற்றும் டிவி ஷோக்களில் பிரபலமாக நடித்துக் கொண்டிருப்பவர் நந்தினி! கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனை கிளி, டார்லிங் டார்லிங் ஆகிய சீரியல்களில் நடித்தார்.

சீரியலில் பிசியாக நடித்து வந்த நந்தினி முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். பெற்றோருடன் மைனா நந்தினி வசித்து வந்த நேரத்தில், அவரது முதல் கணவர் கார்த்திகேயன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் சில காலங்கள் சீரியலில் இருந்து விலகி இருந்த மைனா நந்தினி மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

மைனா நந்தினிக்கும், நடிகர் யோகேஸ்வரனுக்கும் கடந்த ஆண்டு இரண்டாவது திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் கர்ப்பமாக இருந்த மைனா நந்தினிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அத்துடன் நிறைமாத வயிற்றுடன் மைனா நந்தினி நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது.

கர்ப்பமாக இருந்த நிலையிலேயே பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கணவரும் நந்தினியின் சேர்ந்தே நடித்து வருகின்றனர். இப்போது நந்தினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் போட்டுள்ளார்.

இப்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் முதல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்கு அவரின் ரசிகர்கள் ஏராளமான வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் இன்னும் சில புகைப்படங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.