Breaking News, Cinema, News

தலை கனத்தோடு மன்னிப்பு கேட்ட மிஷ்கின்!! நீ எல்லாம் அடங்கவே மாட்டியா.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!!

Photo of author

By Gayathri

பாட்டல் ராதா திரைப்பட விழாவின் பொழுது இயக்குனர் மிஸ்கின் குடிகாரர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது போல் பேசியதும் இசையமைப்பாளர் இளையராஜா அவர்களை ஒருமையில் பேசி இருந்ததும் ரசிகர்களிடையே மட்டுமல்லாத தமிழ் திரையுலகினரையும் கோபத்தில் ஆழ்த்தியது.

மிஷ்கினுடைய ஆபாசமான வார்த்தைகள் குறித்தும் திரைப்பட விழாவில் அவர் பேசிய சர்ச்சையான விஷயங்கள் குறித்தும் நடிகர் அருள்தாஸ் லெனின் பாரதி தயாரிப்பாளர் தானு என பலரும் தங்களுடைய கருத்துக்களையும் விமர்சனங்களையும் கோபங்களையும் பதிவிட்ட வருகின்றனர்.

இவர்களின் பதிவுகளை தொடர்ந்து தன்னுடைய தவறை உணர்ந்ததாக மிஷ்கின் அவர்கள் மன்னிப்பு கேட்ட விதம் தற்பொழுது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அதாவது இயக்குனர் மிஷ்கின் அவர்கள் அந்த விழாவில் தான் பேசியது குறித்து மன்னிப்பு கேட்ட விதம் பின்வருமாறு :-

பாட்டல் ராதா திரைப்பட விழாவில் நகைச்சுவையாக தான் நான் பல விஷயங்களை பகிர்ந்தேன் என்றும் அவ்வாறு பகிரும் பொழுது சில வார்த்தைகள் எல்லை மீறி சென்று விட்டதாகவும் அதற்காக எல்லாம் தன்னை விமர்சிக்க வேண்டாம் என்றும் விமர்சித்த அனைவரிடமும் தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மிஷ்கின் பேசும் பொழுது வெற்றிமாறன் மற்றும் அமீர் இருவரும் சிரித்ததை கூட அனைவரும் விமர்சனம் செய்து வருகின்றனர் என்றும் ஒரு நகைச்சுவை சொல்லும் பொழுது அதனை உணர்வவர்கள் தங்களுடைய ஆழ்மனதிலிருந்து தங்களுடைய உணர்ச்சியை வெளிப்படுத்துவர் என்றும் தெரிவித்து இருந்தார்.

அதுமட்டுமல்லாது, எனக்கு தலைகனமில்லை என்றும் என்னுடைய வெற்றி என்னுடைய தலை மீது ஏறி இருந்தால் நான் மிகப்பெரிய அளவில் பெரிய நடிகர்களை கொண்டு படங்களை உருவாக்கி இருப்பேன் என்று கூறி மன்னிப்பு கேட்டிருக்கிறார். இது மட்டும் இன்றி இயக்குனர் மிஷ்கின் பேச்சை கண்டித்து ஒருவர் தன்னுடைய செருப்பால் அடிப்பேன் என்று கூறியதற்கு அவரிடம் 8ம் நம்பர் செருப்பு இருந்தால் அதனை இரண்டாக எரியும் படியும் நக்கலாக தெரிவித்திருப்பது அனைவரையும் மேலும் கோபத்தில் அழுத்தியுள்ளது.

இவர்கள் கதை நாயகர்கள் அல்ல.. வாழ்க்கை நாயகர்கள்!! வாழ்ந்து காட்டிய ஹீரோக்கள்!!

தொடர்ந்து கடன் வாங்கும் கமலஹாசன்!! இப்படியும் ஒரு பழக்கமா.. காரணம் என்ன!!