ஐயோ அவர் இருக்காரா?… மிஷ்கின் எடுத்த திடீர் முடிவு… தளபதி 67 ல் நடக்க போகும் மாற்றம்!

0
208

ஐயோ அவர் இருக்காரா?… மிஷ்கின் எடுத்த திடீர் முடிவு… தளபதி 67 ல் நடக்க போகும் மாற்றம்!

மிஷ்கின் தற்பொது சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் அரசியல்வாதி வேடத்தில் நடிக்கிறார். தொடர்ந்து பல படங்களில் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

வாரிசு படத்தின் மேல் இருக்கும் எதிர்பார்ப்பை விட இப்போதே தளபதி 67 படத்தின் மீதுதான் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. தளபதி 67 திரைப்படத்தை மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களின் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

இந்த படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் தயாரிக்க, அனிருத் இசையமைப்பார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் மாஸ்டர் என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்துள்ளனர். சமீபத்தில் லோகேஷ் இயக்கிய விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது.

இந்த படத்தில் சஞ்சய் தத், விஷால், நிவின் பாலி மற்றும் மிஷ்கின் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிஷ்கினும் இதை சில நேர்காணல்களில் சூசகமாக வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் இப்போது படத்தில் விஷால் இருப்பததால், மிஷ்கின் இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளாராம்.

மேலும் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கலைப்புலி தாணு தயாரிக்கும் படத்தின் பணிகளும் தொடங்க இருப்பதால், அந்த படத்தில் கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் தளபதி 67 படத்தில் இருந்து வெளியேற அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous articleமீண்டும் இணையும் ஓபிஎஸ் இபிஎஸ்? பிரதமரால் முடிவுக்கு வரும் ஒற்றைத் தலைமை!
Next articleஷங்கர் கையில் எடுக்கும் வேள்பாரி… 3 பாகங்களுக்கு 2000 கோடி பட்ஜெட்… ஹீரோ இவரா?