ஒரு ப்ரோமோஷனும் இல்லை… ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகுமா பிசாசு 2?

Photo of author

By Vinoth

ஒரு ப்ரோமோஷனும் இல்லை… ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகுமா பிசாசு 2?

Vinoth

ஒரு ப்ரோமோஷனும் இல்லை… ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகுமா பிசாசு 2?

பிசாசு 2 திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படத்தை இயக்கு முடித்துள்ளார் மிஷ்கின். அதில் ஆண்ட்ரியா பாதிரியார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்கு இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பூர்ணா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்து கிராபிக்ஸ் பணிகள் நீண்ட நாட்களாக நடந்த நிலையில். ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு இந்த படம் ரிலீஸ் ஆகும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா 20 நிமிடம் அளவுக்கு நிர்வாணமாக நடித்துள்ளதாக சொல்லப்பட்டது. அந்த காட்சிகள் கதைக்கு முக்கியத்துவம் உள்ளது என்பதால் அதை படமாக்கியதாக படக்குழு தெரிவித்தது.

இந்நிலையில் அறிவித்த ரிலீஸ் தேதிக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் படக்குழு எந்தவொரு ப்ரமோஷன் பணிகளையும் செய்யவில்லை. அதனால் ஆகஸ்ட் 31 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆவதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. முன்னதாக பிசாசு 2 படத்தின் தயாரிப்பாளர் தயாரித்திருந்த மற்றொரு படமான குருதி ஆட்டம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரிலீஸாகி தோல்வி அடைந்தது. அதனால் பொருளாதார ரீதியாக படத்தை ரிலீஸ் செய்வதிலெ ஏதேனும் பிரச்சனை இருக்குமா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.