பிரசவ வார்டில் நுழைந்த மர்ம ஆசாமி! போலீசார் வலைவீச்சு!

பிரசவ வார்டில் நுழைந்த மர்ம ஆசாமி! போலீசார் வலைவீச்சு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனை என இரண்டுமே உள்ளது.அந்த வகையில் செங்கல்பட்டு பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனைக்கு தினம்தோறும் நூறுக்கும் மேற்பட்டோர் வந்து செல்வார்கள்.மேலும் இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு வார்டு என்பது தனியாக உள்ளது.

இதற்க்கு செங்கல்பட்டு மாவட்டமின்றி ,காஞ்சிபுரம் ,திருவண்ணாமலை ,விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கர்ப்பிணிய பெண்களும் பிரசவத்திற்காக இங்கு தான் வருவார்கள். மேலும் மகப்பேறு பிரிவின் ஒரு அறையில் இருவருக்கு பிரசவ சிகிச்சை அளிகப்படுகின்றது.இந்நிலையில் 40 வயது உடைய மர்ம நபர் ஒருவர் மகப்பேறு பிரிவில் நேற்று முன்தினம் நுழைந்துள்ளார்.

மேலும் அங்கிருந்த பெண்களிடம் டாக்டர் என கூறி சிகிச்சை அளிப்பது போல் சென்றுள்ளார்.அதனையடுத்து அங்கிருந்த பெண்களிடம் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.அதனையடுத்து அவர்களை மொபைல் போனில் படம் எடுக்க முயற்சி செய்துள்ளார்.அப்போது அந்த பெண்கள் கூச்சல்லிட்டுள்ளனர்.

அதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு வருவதற்குள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.மேலும் இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு போலீசாரிடம் புகார் அளித்தனர்.அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிந்த மர்ம நபர்  படத்தை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment